நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக மற்றொரு கதாநாயகி இணைந்துள்ளார்.
Also Read | போடு சரவெடிய.. சிவகார்த்திகேயன் நடிக்கும் 'PRINCE' படத்தின் 1st சிங்கிள் அப்டேட்!
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.
இந்த படத்தில் பொன்னியின் செல்வன் அருண்மொழி வர்மன் என்ற உடையார் ஶ்ரீ ராஜ ராஜ சோழ தேவர் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து, கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், அகிலன் திரைப்படத்திலும், எம். ராஜேஷ் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும், அகமது இயக்கத்தில் புதிய திரைப்படத்திலும் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.
இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஆண்டனி இயக்கத்தில், ஜெயம் ரவி புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ஜெயம் ரவியின் 31வது படமாக இந்த படம் உருவாக உள்ளது.
இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக, கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கின்றனர். இதனை அதிகாரப்பூர்வமாக ஜெயம் ரவி அறிவித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'பிரேமம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன்.
பின்னர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. தெலுங்கில் 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
கடைசியாக தமிழில் அனுபமா அதர்வாவுடன் இணைந்து நடித்த ‘தள்ளி போகாதே’ படம் சமீபத்தில் வெளியானது.
இந்த JR31 படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமாரின் ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.
Also Read | ஆக்ரோஷமான லுக்கில் 'கேப்டன்' ஆர்யா.. வெளியான மிரட்டலான ரிலீஸ் தேதி போஸ்டர்!