நடிகர் ஜெயம் ரவி, தமது அடுத்த படத்திற்காக இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணனுடன் 2-வது முறையாக இணையும் படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.
கடைசியாக 'பூமி' படத்தில் ஜெயம் ரவியை கண்டோம். அதன் பின்னர் இயக்குநர் அகமதுவுடன் 'ஜன கண மனா' படத்திலும் ஜெயம் ரவி நடித்துள்ளார். தாப்ஸி, ரஹ்மான், எம்.எஸ். பாஸ்கர், ராம், எல்னாஸ் நோரூஸி, நானா படேகர் ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதேபோல் மணி ரத்னத்தின் 'பொன்னியன் செல்வன்' பைப்லைனிலும் ஜெயம் ரவி இருக்கிறார்.
இந்நிலையில் தான், '#JR28' என்கிற ஹேஷ்டேகில் வெளியாகியிருக்கும், ஜெயம் ரவியின் 28வது திரைப்படமான இப்படம் குறித்த அறிவிப்பு போஸ்டரில், இப்படத்தை ஸ்கிரீன் சீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி முன்னதாக இயக்குநர் கல்யாணகிருஷ்ணனுடன் 2015 ஆம் ஆண்டு வெளியான 'பூலோகம்' படத்தில் நடித்தார். நல்ல விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தை அடுத்து இந்த கூட்டணி தற்போது மீண்டும் இணைகிறது.
இந்த படத்தில் நாயகியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தின் நடுவில் இருந்து தொடங்க உள்ளது. இது ஒரு அதிரடி காட்சிகளைக் கொண்ட ஒரு திரில்லர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ALSO READ: "சரத்குமார் - ஜிப்ரான்".. இணையும் வெப் சீரிஸ்.. வேற லெவல் டைட்டில்! இயக்குநர் இவரா?