சபரிமலையில் ஜெயம் ரவியுடன் ஐயப்பனை தரிசித்த விக்னேஷ் சிவன்! ட்ரெண்ட் ஆகும் புகைப்படங்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஜெயம் ரவி, நடிகர் ஜெயராமன் ஆகியோர் அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

Advertising
>
Advertising

கடந்த வருடம் செப்டம்பர் 30-ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் முக்கிய முதன்மை கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். அதாவது இந்த திரைப்படத்தின் கதையின் நாயகனான பொன்னியின் செல்வன் என்கிற ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். இப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்த கார்த்தியுடன் படம் முழுவதும் பயணிக்கும் கதாபாத்திரமாக, ஜெயராமன், நம்பி என்கிற கேரக்டரில் நடித்திருந்தார்.

இதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவன், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். விஜய் சேதுபதி , சமந்தா, நயன்தாரா நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன், செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை இயக்கியிருந்தார்.

அண்மையில் புத்தாண்டுக்கு நயன்தாராவை திருமணம் செய்தது, இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனது, செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை இயக்கும்போது முதல்வர் ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருடன் இணைந்து பணிபுரிந்தது, அடுத்ததாக அஜித்தின் 62வது திரைப்படத்தில் அவரை இயக்க உள்ளது, தமது மனதுக்கு நெருக்கமான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை  கடந்த வருடம் இயக்கியது உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு நன்றி தெரிவித்து புத்தாண்டை வரவேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதேபோல் இயக்குனர் H.வினோத் அஜித்தின் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக அஜித் மற்றும் போனிக் கபூருடன் இணைந்து துணிவு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் துணிவு திரைப்படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான், இவர்கள் அனைவருமே சபரிமலைக்கு சென்றிருக்கின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

குறிப்பாக ஜெயம் ரவி, ஜெயராம், விக்னேஷ் சிவன் மற்றும் பல திரைப்பட பிரபலங்கள், கலைஞர்கள், ஐயப்ப பக்தர்கள் பலரும் இடம் பெற்ற புகைப்பங்கள் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Jayam Ravi Jayaram Vignesh Shivan H Vinoth Sabarimala temple

People looking for online information on Jayam Ravi, Jayaram, Ponniyin Selvan, Sabarimala Temple will find this news story useful.