16 வருஷமாக கோமாவில் இருந்த ஒருவன் விழித்துக்கொண்டால் என்ன நடக்கும் என்ற ஒன்-லைனை ஜாலியான கதையாக கொடுத்த படம் ’கோமாளி’. கடந்த ஆண்டு வெளியான இந்த படம் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய முதல் படமாகும்.
ஜெயம் ரவியுடன், காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், ஷா ரா, ஆர்ஜே ஆனந்தி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நெல்சர் தன் டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த ஹாலிவுட் திரைப்படமான ’1917’ பற்றி குறிப்பிட்ட அவர், நான் ஒளிப்பதிவில் கற்றுக்கொண்டது 20 சதவீதம் என்று நினைத்திருந்தேன். அனால் இந்த படம் அதை 14 சதவீதமாக குறைத்து விட்டது என்று மனம் திறந்துள்ளார்.
’1917’ -ஹாலிவுட் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ரோஜர் டீக்கின்ஸ் (Roger Dekins) ஹாலிவுட்டின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். முதலாம் உலகப்போரில் பிரிட்டிஷ் படை ஜெர்மன்படையோடு மோதியபோது நடைபெறும் கதையை படமாக்கி இருக்கும் டீக்கின்சின் ஒளிப்பதிவு சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.