BREAKING:ஜெயம் ரவி நடிக்கும் 'அகிலன்'.. பட ரிலீஸ் தள்ளிப்போகிறதா? புது ரிலீஸ் தேதி என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த BREAKING தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

Advertising
>
Advertising

‘பூலோகம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன், ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 28வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் தொடங்கி, பின்னர் தூத்துக்குடி வரை படப்பிடிப்பு நடந்தது.

ஸ்கிரீன் சீன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த இப்படத்தில் ஜெயம் ரவி, ப்ரியா பவானி சங்கர் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் வத்திக்குச்சி, காலா, ரைட்டர் படங்களில் நடித்த திலீபன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்துக்கு சாம் சி எஸ் இசை அமைக்கிறார். விவேக் ஒளிப்பதிவை கையாள, விஜய் முருகன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றுள்ளார்.

துறைமுகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியிலும், சில முக்கிய காட்சிகள் சென்னை காசிமேட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன. 80 சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் குஜராத்தில் உள்ள மிகப்பெரிய கண்டெய்னர் தளத்திலும் படப்பிடிப்பை இயக்குனர் நடத்தியுள்ளார். தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தில் ஜெயம் ரவி DON ஆக நடிப்பதாக டீசரில் (A1,420) சொல்லப்படுகிறது. மேலும் பிரியா பவானி சங்கர் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி கவனத்தைப் பெற்றது.

செப்டெம்பர் 15, 2022 அன்று இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அகிலன் திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி (11.11.2022) திரையரங்குகளில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரிலீஸ் தேதி மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Jayam Ravi AKILAN postponed to November 11th 2022

People looking for online information on Agilan, Akilan, Jayam Ravi, Priya Bhavani Shankar, Tanya Ravi will find this news story useful.