ஜெயம் ரவி நடிக்கும் 'அகிலன்'.. தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை தியேட்டர்ல ரிலீசா? செம்ம சம்பவம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம் ரவி நடிப்பில் இன்று வெளியாகி உள்ள அகிலன் படத்தின் தமிழக திரையரங்க எண்ணிக்கை வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் புதிய படம்.. போஸ்டருடன் வெளியான தெறி அப்டேட்! 

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன், அவற்றில் முதல் படமான அகிலன் படம் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என். கல்யாண கிருஷ்ணன் இந்த படத்தினை இயக்கி உள்ளார். பிரியா பவானி ஷங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடித்துள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

துறைமுகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியிலும், சில முக்கிய காட்சிகள் சென்னை காசிமேட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகும் 28வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்துக்கு சாம் சி எஸ் இசை அமைக்கிறார். விவேக் ஒளிப்பதிவு செய்துள்ளார், விஜய் முருகன் கலை இயக்குனராக பணிபுரிகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓடிடி உரிமத்தை பிரபல ஜி5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இந்த படம், தமிழகம் முழுவதும் சுமார் 500+ திரையரங்க திரைகளில் வெளியாகி உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்'.. "அந்த ஒரு ஷாட்டை கண்டிப்பா எடுக்கனும்".. வெற்றிமாறன் EXCLUSIVE தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Jayam Ravi AGILAN Movie Tamilnadu Theatre Count

People looking for online information on Agilan, Jayam Ravi, Priya Bhavani Shankar will find this news story useful.