BREAKING: சிம்புவுடன் முதன்முறையாக இணைந்த இளம் இசையமைப்பாளர்! CORONA குமார் படத்தின் சரவெடி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வேல்ஸ் இன்டர்நேஷனல்ஸ் ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். அதனைத்தொடர்ந்து பத்து தல படத்திலும் நடிக்கிறார்.

Javad Riaz to compose music for STR ‘s CoronaKumar.
Advertising
>
Advertising

இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் நாள் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் வணிகரீதியில் நல்ல வெற்றி பெற்றது. இயக்குனர் கோகுல்‌, கொரோனா குமார் என்ற புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படம் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தின் ஸ்பின் ஆப் ஆகும். அந்த படத்தில் வந்த சுமார் மூஞ்சி குமார் கதாப்பாத்திரத்தின் நீட்சியாக கொரோனா குமார் கதாபாத்திரம் உருவாகி உள்ளது.

Javad Riaz to compose music for STR ‘s CoronaKumar.

இந்தப்படத்தில் நடிகர் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார் இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில்  துவங்க உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் சிம்புவின் 48வது திரைப்படமாகும். இந்த படத்திற்கு மாநகரம் படத்தின் இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்முறையாக சிம்பு படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசையமைக்க உள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோவுக்கான பாடலை Think Music தளத்தில் வெளியிட்டுள்ளது. CSK சிங்கங்களா எனும் பாடல் சிம்பு, பூவையார் குரலில் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Javad Riaz to compose music for STR ‘s CoronaKumar.

People looking for online information on Corona Kumar, Javed Riaz, Str will find this news story useful.