விமான பணியாளராக வந்த பிரபல ஹாலிவுட் நடிகர்.. பரபரப்பான பயணிகள்.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஹாலிவுட் நடிகரான ஜேசன் மோமோ விமான பணியாளராக சென்று வாட்டர் பாட்டில்களை பயணிகளுக்கு வழங்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read |  "எல்லாமே கடவுள் அருள்.." - The Gray Man ஹாலிவுட் படம் அமைந்தது பற்றி தனுஷ் Exclusive

பொதுவாகவே விமான பயணம் பலருக்கும் பிடித்த விஷயமாக இருக்கும். அதுவும் நாம் பயணிக்கும் அதே விமானத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் விமான பணியாளராக வந்தால் எப்படி இருக்கும்? அந்த அரிய அனுபவத்தை பெற்றிருக்கிறார்கள் சமீபத்தில் ஹவாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தவர்கள். ஹவாயை மையமாகக்கொண்டு இயங்கும் ஹவாய் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை பயணத்திற்கு தயாராகியுள்ளது. அப்போது, விமானத்தின் பணியாளராக வந்திருக்கிறார் பிரபல ஹாலிவுட் நடிகரான ஜேசன் மோமோ.

ஜேசன் மோமோ

அமெரிக்காவை சேர்ந்தவரான ஜேசன் மோமோ புகழ்பெற்ற அக்குவாமென், கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஆகிய படைப்புகள் மூலமாக ஏராளமான ரசிகர்களை பெற்றார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ஹவாயில் இருந்து புறப்பட்ட விமானத்தில் பணியாளராக கையில் தண்ணீர் பாட்டில்களை ஏந்தியபடி வந்திருக்கிறார் ஜேசன். தலையில் பூ வைத்தபடி வந்த அவரை கண்ட விமான பயணிகள் அனைவரும் திகைப்படைந்திருக்கிறார்கள்.

மேலும், பயணிகள் அனைவர்க்கும் தண்ணீர் பாட்டில்களை வழங்கியுள்ளார். மேலும், அங்கிருந்த அனைத்து பயணிகளுக்கும் 10,000 மைல் இலவசமாக பயணிப்பதற்கான அறிவிப்பையும் ஜேசன் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே இதனை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட, அது வைரலாகிவிட்டது.

தண்ணீர் பாட்டில்

பிரபல நடிகரான ஜேசன் தண்ணீர் பாட்டில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் விமானத்தில் அவர் பயணிகளுக்கு அளித்தது அவருடைய நிறுவனத்தினுடைய தண்ணீர் பாட்டில்கள் தான் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும், ஜேசன் தரப்பிலோ விமான நிறுவனத்தின் தரப்பிலோ இதுகுறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | போடு.! ஹாலிவுட் fans-க்கு ட்ரீட் தான்.. ஒரு நாள் முன்பே ரிலீஸ் ஆகும் “புல்லட் டிரெய்ன்”

தொடர்புடைய இணைப்புகள்

Jason Momoa turns flight attendant in Hawaii

People looking for online information on Flight, Flight attendant, Hawaii, Jason Momoa, Jason Momoa turns flight attendant will find this news story useful.