'வாரிசு' படத்தின் அடுத்த பாடல்.. நடன இயக்குநர் ஜானி கொடுத்த அப்டேட்..! 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | "படம் பாத்தேன்னு சொன்னீங்க".. 'கலகத்தலைவன்' குறித்து அமைச்சரிடம் விசாரித்த முதல்வர்..!

'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில்  நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ரஞ்சிதமே"  வெளியாகியுள்ளது.
இந்த பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வாரிசு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை Phars Films நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் கைப்பற்றி உள்ளார்.

இந்நிலையில் நடன இயக்குனர் ஜானி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். "இன்னொரு வெற்றிகரமான பாடல் வர உள்ளது. வாரிசு படத்தின் எழில் மிகு பெல்லாரி படப்பிடிப்பில் பல நல்ல தருணங்கள் இருந்தன. எங்களை வரவேற்று ஆதரவளித்த அன்பான மக்களுக்கு நன்றி " என ஜானி மாஸ்டர் பதிவிட்டுள்ளார்.

 

Also Read | பூர்வீக வீட்டில் கீர்த்தி சுரேஷ்.. தென் தமிழ் நாட்டுல இந்த கிராமம் தான் சொந்த ஊராம்! வைரல் PHOTOS

தொடர்புடைய இணைப்புகள்

Jani Master Tweet about Varisu Song Shooting

People looking for online information on Jani Master, Varisu, Varisu song shooting, Vijay will find this news story useful.