"அட, இப்டி தான் மேகம் கருக்காதா DANCE உருவாச்சா?".. ஜானி மாஸ்டர் பகிர்ந்த BTS வீடியோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி இருந்த திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'.

jani master shares megham karukatha bts video in twitter
Advertising
>
Advertising

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில், தனுஷுடன் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்த இந்த திரைப்படம், வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்திருந்தது.

திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை போலவே, படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கொண்டாடப்பட்டிருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு, திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மூலம், நடிகர் தனுஷ் மற்றும் இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீண்டும் இணைந்திருந்தனர்.

அவர்களின் கூட்டணியில் உருவான முந்தைய படங்கள் போலவே, திருச்சிற்றம்பலம் படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் இசை ஜாலத்தை உண்டு பண்ணி இருந்தது. 'மேகம் கருக்காதா', 'தாய்க் கிழவி', 'தேன்மொழி' உள்ளிட்ட அனைத்து பாடல்களும் பெரிய ஹிட்டடித்திருந்தது. அதிலும் குறிப்பாக, மேகம் கருக்காதா பாடலில் வரும் நடன மூவ்மென்ட்கள், பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன் பலரும் இதனை ரீல்ஸ் வீடியோவாகவும் நடனமாடி வெளியிடவும் செய்திருந்தனர்.


சமூக வலைத்தளத்தை எப்போது திறந்தாலும் இந்த பாடலின் வீடியோக்கள் தான் அதிகம் நிரம்பி இருந்தது.

இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் பாடலின் டான்ஸ் மாஸ்டர் ஜானி. இந்நிலையில், தற்போது மேகம் கருக்காதா பாடலின் மேக்கிங் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் ஜானி மாஸ்டர் வெளியிட்டுள்ளார்.

 

மேலும் தனது கேப்ஷனில், பாடலுக்கு அமோகமான வரவேற்பை அளித்ததற்கு நன்றி என்றும் ஜானி மாஸ்டர் குறிப்பிட்டுள்ளார். மேகம் கருக்காதா பாடலின் வீடியோ நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை அடுத்து, இந்த பாடலின் BTS வீடியோவும் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Jani master shares megham karukatha bts video in twitter

People looking for online information on Dhanush, Jani Master, Megham Karukatha, Nithya Menen, Raashi Khanna, Thiruchitrambalam will find this news story useful.