ஹீரோவாகும் அரபிக் குத்து 'புகழ்' ஜானி மாஸ்டர்.. வைரலாகும் பூஜை ஃபோட்டோஸ்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவின் பிரபல டான்ஸ் மாஸ்டரான ஜானி மாஸ்டர், நாயகனாக நடிக்க உள்ள திரைப்படம் தற்போது ஆரம்பமாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 'கோப்ரா' படத்தின் ரிலீஸ்.. திருச்சி, மதுரை, கோவை வரும் விக்ரம்.. எப்போ? எங்கே? முழு விவரம்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 100 திரைப்படங்கள் வரை டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்துள்ளவர் ஜானி மாஸ்டர்.

அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடித்த அலா வைகுந்தபுரம்லோ படத்தில் இடம்பெற்ற 'புட்ட பொம்மா' பாடலில் வரும் நடனம், ஜானி மாஸ்டரை அதிகம் பிரபலம் அடைய வைத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் கூட விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த 'பீஸ்ட்' படத்தில் வரும் 'அரபிக் குத்து', 'ஜாலியோ ஜிம்கானா' பாடலுக்கும், தற்போது திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் 'மேகம் கருக்காதா' பாடலுக்கும் ஜானி மாஸ்டர் தான் நடனம் அமைத்திருந்தார். அப்படி ஜானி மாஸ்டர் நடனம் அமைத்த பல பாடல்களில் வரும் நடன அசைவுகள், இந்திய அளவில் ஹிட்டாகியும் உள்ளது.

இந்நிலையில், பிரபல டான்ஸ் மாஸ்டரான ஜானி மாஸ்டர் தற்போது ஹீரோ அவதாரமும் எடுத்துள்ளார். யத ரஜா தாதா பிரஜா (Yatha Raja Tatha Praja) என்ற தெலுங்கு படத்தில் தான் ஜானி மாஸ்டர் நாயகனாக நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று (22.08.2022) ஆரம்பமானது.

ஸ்ரீனிவாஸ் விட்டலா இயக்கும் இந்த திரைப்படத்தில், 'சினிமா பண்டி' திரைப்படம் மூலம் பிரபலமான நடிகர் விகாஸ் மற்றும் நடிகை ஷ்ரஸ்டி வர்மாவும் நடிக்கின்றனர். மேலும், இந்த படத்தின் பூஜையில் நடிகர் சர்வானந்த், பாலிவுட் நடிகர் சல்மான் கானின் மைத்துனனான ஆயுஷ் ஷர்மா, இயக்குனர் ஜே. கருண் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில், ஜானி மாஸ்டர் ட்விட்டரில் பகிர்ந்துள்ள நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஜானி மாஸ்டர் நடித்திருந்த 'பயணி' என்ற மியூசிக் ஆல்பம் ரிலீஸாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | "சட்ட ரீதியாக சந்திப்போம்" - இயக்குநர் லிங்குசாமி வெளியிட்ட விளக்க அறிக்கை.!

Jani master new movie as hero in telugu shoot starts

People looking for online information on ஜானி மாஸ்டர், Jani Master, Jani Master new Movie, Telugu shoot will find this news story useful.