MEGHAM KARUKATHA: "அது அவரோட மேஜிக்" - TREND-ல் ‘பறக்க பறக்க’ STEP.. தனுஷ் வைரல் ட்வீட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிப்பில் ரூஸோ பிரதர்ஸ் இயக்கி நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது தி கிரே மேன் திரைப்படம். இந்த திரைப்படம் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகி ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | ரெட் ஜெயன்ட் மூவிஸின் 15 வருட திரைப்பயணம்... விரைவில் வெற்றிக் கொண்டாட்டம்.!

இதனிடையே தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய மூன்று நடிகைகள், கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். இந்த படம் வரும் ஆகஸ்டு 18-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலான இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். முன்னதாக இந்த படத்தில் இருந்து தாய் கிழவி என்கிற பாடல் வெளியாகி வைரலானது. இதனைத் தொடர்ந்து இந்த மேகம் கருக்காதா எனும் பாடல் இந்த படத்தில் இருந்து வெளியாகியுள்ளது. தனுஷ் எழுதி, அவரே பாடியுமுள்ள இந்த பாடலை பிரபல டான்ஸ் மாஸ்டரான ஜானி மாஸ்டர் கோரியோகிராப் செய்திருக்கிறார்.

இணையத்திலும் இணையத்துக்கு வெளியேயும் நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுவரும் இந்த பாடலில் பறக்க பறக்க எனும் டான்ஸ் மூவ்மெண்ட் வைரலாகிவிட்டது. பலரும் இந்த பாடலின் பறக்க பறக்க எனும் வரிகளில் வரும் இந்த பாடலின் சிக்னேச்சர் ஸ்டெப்பை ரீல்ஸாக முயற்சித்து வருகின்றனர்.

இந்த மூவ்மெண்ட் இணையத்தில் வைரலாகி வர, இது குறித்து நடிகர் தனுஷ் தம்முடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் தனுஷ் சொல்லி இருப்பது என்னவென்றால்,  “மை டியர் ஜானி மாஸ்டர் மேஜிக்” என்று குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலங்களில் அல்லு அர்ஜூன் நடித்த அலா வைகுந்தபுரம்லோ படத்தில் இடம்பெற்ற புட்டபொம்மா பாடல், விஜய் நடித்த பீஸ்ட் பட அரபிக் குத்து பாடல் என பல ஹிட்  ஆன பாடல்களின் நடனத்தை அமைத்தவர் ஜானி மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | சூரரைப் போற்றுக்கு 5 தேசிய விருது.. "ஊர்வசிக்கும் கெடச்சிருக்கணும்" - பிரபல நடிகை ட்வீட்..

தொடர்புடைய இணைப்புகள்

Jani Master Magic dhanush thiruchitrambalam megam karukatha

People looking for online information on Dhanush, Dhanush thiruchitrambalam, Dhanush thiruchitrambalam megam karukatha, Jani Master, Thiruchitrambalam will find this news story useful.