"ஹே... சூப்பரா இருக்குபா"... தளபதியோட பிறந்தநாள் கொண்டாடிய ஜானி மாஸ்டர்! வைரலாகும் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் திலீப் குமார் இயக்கும் 'பீஸ்ட்' திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார்.   சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இப்படத்தின்  முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று முடிந்ததை அடுத்து படக்குழுவினர் சென்னை திரும்பினார். பிறகு கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் தொடங்கி இருக்கிறது. படப்பிடிப்பில் பங்கேற்க பூஜா ஹெக்டே சென்னை வந்திருந்தார். அதன் புகைப்படம் வெளியாகி வைரலானது. 

இந்நிலையில் 'பீஸ்ட்' படத்தின் நடன இயக்குநர் ஜானி மாஸ்டரின் பிறந்த நாள் இன்று படக்குழுவினரால் கொண்டாடப்பட்டது. "பீஸ்ட்" படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அந்தப் புகைப்படங்களை வெளியிட்டு ஜானி மாஸ்டருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் திலீப் குமார் உள்ளிட்டோர் நடன இயக்குநர் ஜானிக்கு வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு அரங்கில் நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Vijay, Nelson

தொடர்புடைய இணைப்புகள்

Jani Master Birthday Celebration with actor vijay

People looking for online information on Nelson, Vijay will find this news story useful.