"வலிமை' படம் FDFS பார்க்க வருகை தரும் நடிகை ஜான்வி கபூர்? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாரிஸ் பிரான்ஸ்: நடிகை ஜான்வி கபூர் வலிமை படத்தினை காண பிரான்ஸ் செல்ல உள்ளதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சூசகமாக அறிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

உலகப்புகழ் பெற்ற உலகின் மிகப்பெரிய திரையரங்கில் வெளியாகும் 'வலிமை'! செம மாஸ்

வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இந்த வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார்.

நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

வலிமை படம் CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உலகின் மிகப்பெரிய திரையரங்கமான Le Grand Rex Theatre Paris -ல் வலிமை படம் திரையிடப்பட உள்ளது. பிப்ரவரி 25,26,28 ஆகிய நாள்களில் வலிமை படம்  Le Grand Rex Theatre Paris -ல் திரையிடப்படுகிறது பிப்ரவரி 25-ல் 2800 இருக்கைகளைக் கொண்ட ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையில் வலிமை படம் திரையிட உள்ளது.

இந்த தகவலை நடிகை ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராமில் அறிவித்து விரைவில் அஜித் சார் ரசிகர்களையும், பிரான்ஸ் மக்களையும் சந்திக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் வலிமை படத்தை உலகின் மிகப்பெரிய திரை அரங்கில் (Le Grand Rex Theatre Paris) காண ஜான்வி கபூர் செல்ல உள்ளதாக தெரிகிறது.

நடிகை ஜான்வி கபூர் தனது வரவிருக்கும் திரைப்படமான 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி' படத்திற்காக கிரிக்கெட் முகாமில் பயிற்சியை தொடங்கியுள்ளார். நடிகை ஜான்வி கபூர் கிரிக்கெட் ஹெல்மெட் அணிந்து மூத்த இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் தினேஷ் கார்த்திக் உடன் இணைந்து வலைப் பயிற்சி செய்யும் புகைப்படத்தையும் ஜான்விகபூர் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.

மதுரை ஜங்சன் & சென்னை மெட்ரோவில் கெத்து காட்டும் 'வலிமை'! வேற லெவல் சம்பவம்

தொடர்புடைய இணைப்புகள்

Janhvi kapoor will visit Paris for VALIMAI movie FDFS at Le Grand Rex

People looking for online information on Ajith Kumar, ஜான்வி கபூர், வலிமை, Boney kapoor, H.Vinoth, Janhvi Kapoor, Le Grand Rex Theatre, Paris, Valimai Movie will find this news story useful.