கோலமாவு கோகிலா ரீமேக்.. நயன்தாரா கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர்.. வெளியான மிரட்டல் 'TRAILER'!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கும் "குட் லக் ஜெர்ரி" திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | அடடே..பா. ரஞ்சித் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது.. ஆடியோ உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்!

கடந்த 2018 ஆம் ஆண்டு, நயன்தாரா நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருந்த திரைப்படம், "கோலமாவு கோகிலா". இந்த திரைப்படத்தில், நயன்தாராவுடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான், ஜான்வி கபூர் நடித்து வரும் 'குட் லக் ஜெர்ரி' திரைப்படம். கோலமாவு கோகிலாவை போல, இந்த திரைப்படமும் பிளாக் காமெடி வகையில் உருவாகி உள்ளது.

ஜான்வி கபூரின் "குட் லக் ஜெர்ரி"

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி இருந்தது. அதில், கையில் துப்பாக்கி ஒன்றை வைத்த படி, யாரோ ஒருவரை நோக்கி, குறி வைத்து கொண்டிருக்கும் ஜான்வி கபூர் லுக் இருந்தது. சித்தார்த் சென்குப்தா இயக்கிய இந்த "குட் லக் ஜெர்ரி" படத்தில், ஜான்வி கபூர் ஜெய குமாரி என்கிற ஜெர்ரி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வெளியான டிரைலர்

ஜான்வி கபூருடன் தீபக் டோப்ரியால், மிதா வசிஷ்ட், நீரஜ் சூட் மற்றும் சுஷாந்த் சிங் உள்ளிட்டோரும் குட் லக் ஜெர்ரி திரைப்படத்தில் நடித்துள்ளனர். வரும் ஜூலை 29 அன்று, டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் இப்படம் நேரடியாக வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, கேங்ஸ்டர்களுக்கு மத்தியில், ஜான்வி கபூர் அமர்ந்திருக்கும் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது படத்தின் டிரைலரும் வெளியாகி உள்ளது.

பல கேங்ஸ்டர் மத்தியில் தனது குடும்பத்தினருடன் ஜான்வி கபூர் போராடும் கதைக் களத்திற்கு நடுவே நிறைய காமெடி மற்றும் குடும்ப எமோஷனல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

Also Read | கார்த்திக் நரேன் இயக்கத்தில் சரத்குமார்.. பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியான கலர்ஃபுல் போஸ்டர்!!

தொடர்புடைய இணைப்புகள்

Janhvi kapoor starring good luck jerry trailer released

People looking for online information on Good Luck Jerry Movie, Good Luck Jerry Movie Trailer, Janhvi Kapoor, Janhvi Kapoor Good Luck Jerry Trailer, Kolamavu Kokila Hindi Remake, Nayanthara will find this news story useful.