ஜான்வி கபூர் நடிக்கும் சூப்பர் ஹிட் ரீமேக் படம்.. ரிலீஸ் தேதியுடன் வெளியான 1ST LOOK போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீ ஸ்டுடியோஸ் & போனி கபூர் தயாரிப்பில் ஜான்வி கபூர் நடிக்கும் புதிய த்ரில்லர் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | மாலத்தீவு இன்பச்சுற்றுலாவின் கடைசி நாள்.. வைரலாகும் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள்!

தேசிய விருது பெற்ற மாத்துக்குட்டி சேவியர் இயக்கத்தில் புதிய சர்வைவல் த்ரில்லர் திரைப்படத்தில் ஜான்வி  முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஜான்வி கபூர் இதுவரை திரையில் தோன்றாத ஒரு சவாலான பாத்திரத்தில்  நடித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. 'மிலி' என இந்த படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் போஸ்டர்களில் ஜான்வி கபூரின் சீரியஸ் கேரக்டரை காட்டும் விதமாக அமைந்துள்ளது. உறையும் சூழலுக்கு மத்தியில் ஜான்வி போராடிக் கொண்டிருக்கும் போஸ்டர் வரவேற்பை பெற்று வருகிறது.

மிலி நவுடியல் எனும் நர்சிங் படித்த 24 வயது பெண் கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ளார்.  தயாரிப்பாளர் போனி கபூர் தனது & ஜீ ஸ்டுடியோஸின் அடுத்த தயாரிப்பான 'மிலி' மூலம் தனது மகளை தனது தயாரிப்பில் நடிக்க வைத்துள்ளார். 

படத்தின் கதை மற்றும் ஜான்வியின் கதாபாத்திரம் பற்றிய விவரங்கள் தயாரிப்பாளர்களால் மறைக்கப்பட்டிருந்தாலும், படத்தின் மிகப்பெரிய யுஎஸ்பிகளில் ஒன்று ஜான்வி கபூரும் போனி கபூரும் முதல் முறையாக இணைந்து பணியாற்றுவது. மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜாவித் அக்தர் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

ஜீ ஸ்டுடியோஸ் & போனி கபூர் தயாரித்து, மாத்துக்குட்டி சேவியர் இயக்கிய 'மிலி' திரைப்படம் 2022 நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஹெலன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆக இந்த படம் வெளியாக உள்ளது.

Also Read | 'வலிமை' ஹூமா குரேஷிக்கு ஜோடியான தவான்.. வைரலாகும் ஷிகர் தவானின் ROMANTIC 1st LOOK!

தொடர்புடைய இணைப்புகள்

Janhvi Kapoor starrer Mili First look posters

People looking for online information on Janhvi Kapoor, Janhvi Kapoor Mili First look posters, Mili First look posters, Mili Movie will find this news story useful.