ஓடிடி சார்ட்டில் நம்பர் 1-ஆ? .. போனி கபூர் மகள் நடித்த ‘மிலி’ திரைப்படம்.! JANHVI KAPOOR

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜான்வி கபூரின் சமீபத்திய வெளியீடான ‘மிலி’ ஓடிடி சார்ட்டில் நம்பர் 1 இடத்தில் இருப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Janhvi Kapoor Mili tops the OTT chart trending
Advertising
>
Advertising

Also Read | "வாரிசு ஆந்திராவில் 100 கோடி வசூலாகும்னு தில் ராஜூ நம்புறாரு".. - பிஸ்மி EXCLUSIVE!

தமிழிலும் இந்தியிலும் பிரபலமாக இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவரது கணவர் போனி கபூர். போனி கபூர் தற்போது வீட்ல விசேஷம், வலிமை, நேர்கொண்ட பார்வை, நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களை தயாரித்தார். இதனை தொடர்ந்து தற்போது அஜித் நடிப்பிலான துணிவு படத்தை தயாரித்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

Janhvi Kapoor Mili tops the OTT chart trending

போனி கபூரின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்திய படமான ‘மிலி’ படம் வெளியாகி ஓடிடியில் வரவேற்பை பெற்று வருகிறது. சர்வைவல் ட்ராமாவாக நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிய ‘மிலி’ கதை பார்வையாளர்களையும் சினிமா ஆர்வலர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஜான்வி கபூரின் திறமையான நடிப்புக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

பார்வையாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடம் இருந்து கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பைத் தொடர்ந்து ‘மிலி’ திரைப்படம் இந்தியன் ஓடிடி டொமைனில் முதல் இடத்தையும், திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் ட்ரெண்டிங் டாப்பிக்காகவும் உள்ளது.  இதனால் மிலி படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது.

‘குட் லக் ஜெர்ரி’- ஒரு டார்க் காமெடி, ‘ரூஹி’- ஹாரர் காமெடி, ‘குன்ஜன் சக்சேனா’- பயோகிராஃபிகல் ட்ராமா மற்றும் ‘மிலி’- சர்வவைல் ட்ராமா என தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படத்திலும் தொடர்ச்சியாக தனது நடிப்புத் திறமைக்கு சவால் விடுக்கும் கதாபாத்திரங்களையே ஜான்வி தேர்ந்தெடுத்து நடித்து வருவதாக ரசிகர்கள் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

Also Read | பிரபல இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் கார்த்தி.. வெளியான சூப்பர் தகவல்!!.. ஷூட்டிங் எப்போ?

தொடர்புடைய இணைப்புகள்

Janhvi Kapoor Mili tops the OTT chart trending

People looking for online information on Janhvi Kapoor, Mili, OTT will find this news story useful.