சூப்பர் ஹிட்டான'கோலமாவு கோகிலா' இந்தி ரீமேக்.. ஜான்வி கபூர் நடத்திய போட்டோஷூட்! வைரல் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் திரை உலகின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜான்வி கபூர்.

Advertising
>
Advertising

Also Read | மொகாலய உடையில் சமந்தா.. பிரபல போட்டோகிராபர் வெளியிட்ட தாறுமாறான போட்டோஸ்!

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'தடக்' என்னும் திரைப்படத்தின் மூலம், நடிகையாக அறிமுகம் ஆகியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சில படங்கள் நடித்து வந்த ஜான்வி கபூர், தமிழில் நயன்தாரா நடிப்பில், நெல்சன் இயக்கி இருந்த "கோலமாவு கோகிலா" படத்தின் ஹிந்தி ரீமேக்கில், முதன்மை கதாபாத்திரத்திலும் தற்போது நடித்துள்ளார்.

"குட் லக் ஜெர்ரி" என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது, கடந்த ஜூலை 29 ஆம் தேதி நேரடி வெளியிடாக இந்த படம் ரிலீஸாகி உள்ளது.

இதற்காக நடிகை ஜான்வி கபூர் புதிய  போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோக்களில் பல நிறங்கள் உள்ள வெண்ணிற உடையில் நவநாகரீக தோற்றத்தில் நடிகை ஜான்வி கபூர் தோன்றியுள்ளார்.

'குட் லக் ஜெர்ரி' திரைப்படமும் கோலமாவு கோகிலாவை போல,  பிளாக் காமெடி வகைமையில் அமைந்துள்ளது.

சித்தார்த் சென்குப்தா இயக்கிய இந்த "குட் லக் ஜெர்ரி" படத்தில், ஜான்வி கபூர் ஜெய குமாரி என்கிற ஜெர்ரி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜான்வி கபூருடன் தீபக் டோப்ரியால், மிதா வசிஷ்ட், நீரஜ் சூட் மற்றும் சுஷாந்த் சிங் உள்ளிட்டோரும் குட் லக் ஜெர்ரி திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இந்தியில் லைக்கா நிறுவத்துடன் இணைந்து ஆனந்த் எல் ராய் தயாரித்துள்ளார்.

இந்த படம் போக, வருண் தவானுக்கு ஜோடியாக நித்தேஷ் திவாரி இயக்கும் "பவால்" படத்திலும் ஜான்வி நடித்துள்ளார். இன்று இப்படத்தின் அனைத்துப் படப்பிடிப்பும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஜான்வி கபூரின் நடிப்பில் அவரது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் மிலி படமும் தற்போது தயாராகி வருகிறது.

மேலும், மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி என்ற படத்தில் ஜான்வி கபூர் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்திற்காக தினேஷ் கார்த்திக்கிடம் ஜான்வி கபூர் கிரிக்கெட் பயிற்சி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | LIGER படத்தின் ப்ரோமோஷன்ல அனன்யா பாண்டே அணிந்த ட்ரெஸ் விலை மட்டும் இம்புட்டா? அம்மாடியோவ்

தொடர்புடைய இணைப்புகள்

Janhvi Kapoor Good Luck Jerry Super Hit Photoshoot Pictures

People looking for online information on Good Luck Jerry Latest Photoshoots, Good Luck Jerry Movie, Janhvi Kapoor will find this news story useful.