"அசல்ன்னு நெனச்சிட்டு வந்து பாத்தா".. ஜனனி சொன்னதை கேட்டு சிரிச்ச ஹவுஸ்மேட்ஸ்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இதன் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு நிறைந்து சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் இதனை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

அதே போல, பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் அரங்கேறி வருகிறது. அது மட்டுமில்லாமல், இந்த டாஸ்க்கின் பெயரில் ஏராளமான பஞ்சாயத்தும் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது.

பொம்மை டாஸ்க், ராஜாங்கமும், அருங்காட்சியகமும் டாஸ்க் உள்ளிட்ட அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களுக்கு இடையே நிறைய சண்டைகளும் நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் உண்டு பண்ணி இருந்தது.

அப்படி ஒரு சூழலில், கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நீதிமன்ற டாஸ்க் செயல்பட்டு வந்தது. சக போட்டியாளர்கள் மீது தங்களுக்கு தோன்றும் குற்றங்களை முன் வைத்து அதை வழக்காக பதிவு செய்ய வேண்டும். இதற்காக வழக்கறிஞர் ஒருவரை தேர்வு செய்து, அனைத்து போட்டியாளர்களாலும் தேர்வு செய்யப்படும் நீதிபதி முன்பு வைத்து வாதாடி அதில் ஜெயிக்க வேண்டும் என்பது தான் நீதிமன்ற டாஸ்க்.

இதில் பல போட்டியாளர்கள் வைத்த வழக்கு தொடர்பாக நடந்த வாதம், அதிக விறுவிறுப்பை ஏற்படுத்தி இருந்தது. பல வழக்குகளில் எதிர்பாராத வகையில் தீர்ப்பு கிடைத்திருந்த நிலையில், சில வழக்குகள் சற்று வேடிக்கையாக சிரிப்பலை மோடிலும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற டாஸ்க்கின் இறுதியில், ராபர்ட் மாஸ்டர் மற்றும் குயின்சி ஆகியோர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தர்கள். அதே போல, வார இறுதியும் வந்து விட்டதால் இந்த வார எலிமினேஷன் குறித்தும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒவ்வொரு வாரம் முடியும் போது, மிக முக்கியமான கட்டமாக டாஸ்க்கில் போட்டியாளர்களின் செயல்பாடுகளும் பார்க்கப்பட்டு வரும் சூழலில், அடுத்தடுத்து பிக்பாஸ் போட்டியாளர்கள் விளையாட்டு யூகம் எப்படி இருக்கும் என்பதை அறியவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

அப்படி ஒரு சூழலில், அசல் கோலார் மற்றும் கதிரவன் குறித்து போட்டியாளர்கள் மத்தியில் ஜனனி பேசும் விஷயங்கள், அதிகம் வைரலாகி வருகிறது.

சிறையில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் குயின்சி ஆகியோர் இருக்கும் நிலையில், அவரை சுற்றி வெளியே அமுதவாணன், கதிரவன், அசீம், மணிகண்டா, மைனா நந்தினி உள்ளிட்டோர் அமர்ந்திருக்கின்றனர். அப்போது கதிரவன் Hoodie ஆடை போட்டுக் கொண்டு தலையை மறைத்து வைத்துள்ளார்.

அந்த சமயத்தில் அங்கே வரும் ஜனனி, "கதிர பாக்க அசல் மாதிரி இருக்கு. நான் அசல் Mindsetல தான் வந்தேன் அசல் மாதிரி இருக்கேன்னு. இப்படி தான் அவனும் நல்லா மூடி கட்டிக்கிட்டு, நிவாசினி கிட்ட போய் இருப்பான்" என சிரித்து கொண்டு ஜனனி சொல்ல, தொடர்ந்து அமுதவாணனும் அதை நினைவு படுத்தி சில கருத்துக்களை தெரிவிக்க அங்கிருந்த அசீம், கதிரவன், மணிகண்டா உள்ளிட்ட போட்டியாளர்கள் சிரிக்கவும் தொடங்குகின்றனர்.

இதே போல இரவு நேரத்தில் படுக்கை அறையில் அசீம், விக்ரமன், ராம், அமுதவாணன், தனலட்சுமி உள்ளிட்டோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கதிரவனை குறிப்பிட்டு பேசும் ஜனனி, "கதிரவன் ஒரு சப்ப பையன், சட்னி டி அவன் வெள்ளையா இருக்கறதுனால சட்னி டி, அவன் வெள்ளை சட்னி டி" என அடுத்தடுத்து பேச அங்கிருந்த போட்டியார்களும் சிரிக்கத் தொடங்கி விட்டனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Janany think kathiravan as asal kolaar housemates reaction

People looking for online information on Asal Kolar, Bigg Boss 6, Janani, Kathiravan will find this news story useful.