ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Also Read | "ஜிபி முத்து அண்ணா இருந்தா ஒரு Vibe இருக்கும்".. மிஸ் பண்ணி லைவில் ஃபீல் செய்த ரச்சிதா! Bigg Boss
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.
இந்த நிலையில், ஆறாவது பிக் பாஸ் சீசனில் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் நடைபெற்றது. இப்படியான சுவாரஸ்யமான சம்பவங்களால் பிக்பாஸ் வீடு நிறைந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய ரச்சிதா இன்ஸ்டாகிராம் நேரலையில் பல விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். குறிப்பாக பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் தன்னுடைய அனுபவம் குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.
அப்போது பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களில் யார் உங்களுக்கு பிடித்த போட்டியாளர்? என ரச்சிதாவிடம் கேட்கப்படுகிறது. அப்போது அவர்,"பிக்பாஸ் வீட்டுக்குள்ள எனக்கு ஜனனி ரொம்ப பிடிக்கும். அது எல்லோருக்குமே தெரியும். ஏன்னா வீட்ல ஒரு சின்னப்பொண்ணு இருந்தா எப்படி நாம கொஞ்சுவோமோ அப்படித்தான் அவளை நான் பார்த்தேன். உள்ள இருந்தப்போ அவளை கொஞ்சிட்டே இருப்பேன்" என்றார்.
முன்னதாக "யாரை ரொம்ப மிஸ் பண்றீங்க?" என ரச்சிதாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில்," என்னோட ஷிவினை ரொம்ப மிஸ் பண்றேன். பிக்பாஸை மிஸ் பண்றேன். அவரோட வாய்ஸை ரொம்ப மிஸ் பண்றேன். அவரு ரச்சு அப்டின்னு கூப்டுறத மிஸ் பண்றேன். அதைத்தாண்டி என்னோட ஷிவினை ரொம்பவே மிஸ் பண்றேன்" என்கிறார்.
Also Read | "அதோட முடிச்சுக்கோங்க.. நான் பேசுற மாதிரி ஆகிடும்".. ADK பற்றி காட்டமாக பேசிய அசல்