நாட்டுக்கு திரும்ப முடியாத அளவுக்கு, தமிழ்நாட்டில் BIGG BOSS ஜனனிக்கு குவியும் வாய்ப்புகள்..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கிராண்ட் ஃபினாலே நடந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Advertising
>
Advertising

Also Read | புத்தக திருவிழா.! சிறைவாசிகளுக்காக ‘சின்ன பழுவேட்டரையர்’ பார்த்திபன் நெகிழ்ச்சி காரியம்.!

இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி,  மணிகண்டா ராஜேஷ், ரச்சிதா, ADK, கதிரவன், அமுதவாணன், மைனா ஆகியோர் வெளியேறினர். இந்நிலையில் ஃபினாலேவில் விக்ரமன் & அசிம் இருவரில் அசிமின் வெற்றியை அறிவிப்பதற்கு முன்பாக, கையை மாற்றி மாற்றி ஆட்டி விளையாட்டு காட்டிய கமல் இறுதியாக அசிம் வெற்றி பெறுவதாக அறிவித்தார்.

வெற்றி பெற்ற அசிம் கோப்பையை உயர்த்திக்காட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அத்துடன், அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுக்கான காசோலையும், இந்தியாவில் அறிமுகமாகும் மாருதி சுசுகி காரின் பிரஸ்ஸா எனும் மாடலின் முதல் காரும் பரிசாக வழங்கப்பட்டது.  இவர்களுள் ஜனனி என்கிற ஜனனி குணசீலன் இலங்கையில் மாடலிங் பண்ணிக் கொண்டிருந்தவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் பிறகு இவருக்கு பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலேவில் ஜனனியிடம் பேசிய கமல் வெளியில் எப்படி ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது? நாட்டுக்கு திரும்புனீர்களா என கேட்டார். அதற்கு ஜனனியோ, “வெளியில் பலரும் நல்ல வரவேற்பை தருகின்றனர். இல்லை, இன்னும் நாட்டுக்கு திரும்பவில்லை.” என சொல்ல, “அப்படி.. நாட்டுக்கு திரும்ப முடியாத அளவுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது இல்லையா..?” என பாராட்டினார். ஜனனியும் அதனை அங்கீகரித்து மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார்.

Also Read | “என் வேலைய நான் செஞ்சேன்.. நாராயணா.. நாராயணா” .. மணியை கலாய்ச்ச கமல் 😅 GP முத்து Reply

தொடர்புடைய இணைப்புகள்

Janany Gunaseelan Opportunities after bigg boss 6 tamil

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Janany Gunaseelan will find this news story useful.