தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது.

Also Read | திருமண நிகழ்வில் நடிகை ஹன்சிகா மோத்வானி.. வைரலாகும் புகைப்படங்கள்..!
பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.
அதே போல, சமீபத்தில் நடந்து முடிந்த ‘சொர்க்கம் – நரகம் – ஷார்ட்கட்’ டாஸ்க்கில் கூட நிறைய சண்டைகள் மற்றும் குழப்பங்கள் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் அரங்கேறி இருந்தது.
இந்த டாஸ்க்கின் படி, எது சொர்க்கம், எது நரகம், யார் நல்லவர், எவர் கெட்டவர், நரகத்தில் உள்ளவர்கள் சொர்க்கத்திற்கு போவதற்கான குறுக்கு வழி எது என கண்டுபிடித்து சென்றால்? அப்படி செல்ல ஒரு குறுக்கு வழி இருந்து, அதன் வழியே சொர்க்கத்தில் உள்ளவர்களை நரகத்திற்கு அனுப்ப முடிந்தால்?.. எப்படி இருக்கும் என்பதே இந்த டாஸ்க். இதிலும் வழக்கம்போல, சொர்க்கவாசிகள் வீட்டின் உள்ளேயும் நரகவாசிகள் கார்டன் ஏரியாவின் கூண்டிலும் அடைக்கப்படுவார்கள்.
டாஸ்க் இடையே நடந்த சண்டைகள், குழப்பங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் கமல்ஹாசன் தோன்றி விளக்கம் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த வார இறுதியில் எலிமினேஷன் ஆனது யார் என்பதையும் அவர் அறிவித்திருந்தார். அதன்படி இந்த வார எலிமினேஷனாக ஜனனி தேர்வாகியுள்ளதாக அவர் கார்டு காண்பித்தார். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதன்மூலம் ஜனனி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் அதிக ரசிகர்கள் உள்ள போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்த ஜனனி, தற்போது வெளியேறி உள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வேதனையை உருவாக்கி உள்ளது. இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர், முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜனனி பகிர்ந்துள்ள பதிவு, அதிகம் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர், கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஜனனி, "பிக்பாஸ் வீட்டில் நான் இருந்த போது என்னை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் நன்றி. உங்களின் வாக்குகளால் என்னை அதிக அளவு ஊக்கப்படுத்தி உள்ளீர்கள். உங்களது எதிர்பார்ப்புகளை இத்தனை நாட்களில் என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் உங்கள் அனைவரையும் என்னால் முடிந்த எல்லா வழிகளிலும் மகிழ்விப்பேன். மிக்க நன்றி" என ஜனனி குறிப்பிட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் ஜனனியின் பதிவு, தற்போது பாரவையாளர்கள் கவனத்தை அதிகம் பெற்று வருகிறது.
Also Read | அதிர்ச்சி!!! பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அடுத்த போட்டியாளர்... Biggboss6