செம்ம.. விஜய் நடிக்கும் 'தளபதி 67' படத்தில் BIGGBOSS ஜனனி?.. எந்த ROLE-ஆ இருக்கும்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி 67 படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஜனனி நடிக்க உள்ளார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertising
>
Advertising

Also Read | இன்ஸ்டாகிராமில் வரம்பு மீறி கேள்வி கேட்ட ரசிகர்கள்.. நடிகை யாசிகா ஆனந்த் அளித்த Viral பதிலடி!

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய். Beast படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் 'வாரிசு' படம்  கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கியுள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். 

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியாகி உள்ளது.

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், மிஷ்கின், நடிகை த்ரிஷா ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இலங்கையை சேர்ந்த ஜனனி நடிக்க உள்ளார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனனி நடிக்க இருக்கும்  தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனனி நடிக்க உள்ள கதாபாத்திரம் குறித்த தகவலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யுடன் அரசியல் கூட்டணி?.. சீமான் சொன்ன 'நச்' பதில்!

செம்ம.. விஜய் நடிக்கும் 'தளபதி 67' படத்தில் BIGGBOSS ஜனனி?.. எந்த ROLE-ஆ இருக்கும்? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Janany Doing a Role in Vijay Lokesh Kanagaraj Thalapathy 67 Deets

People looking for online information on Janany, Janany Doing a Role in Thalapathy 67, Lokesh Kanagaraj, Thalapathy 67, Varisu, Vijay will find this news story useful.