தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இதன் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு நிறைந்து சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் இதனை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.
அதே போல, பிக்பாஸ் வீட்டில் தற்போது வாரத்திற்கு ஒரு டாஸ்க் அரங்கேறி வருகிறது. அது மட்டுமில்லாமல், இந்த டாஸ்க்கின் பெயரில் ஏராளமான பஞ்சாயத்தும் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது.
பொம்மை டாஸ்க், ராஜாங்கமும், அருங்காட்சியகமும் டாஸ்க் உள்ளிட்ட அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களுக்கு இடையே நிறைய சண்டைகளும் நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் உண்டு பண்ணி இருந்தது.
அப்படி ஒரு சூழலில், கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நீதிமன்ற டாஸ்க் செயல்பட்டு வந்தது. சக போட்டியாளர்கள் மீது தங்களுக்கு தோன்றும் குற்றங்களை முன் வைத்து அதை வழக்காக பதிவு செய்ய வேண்டும். இதற்காக வழக்கறிஞர் ஒருவரை தேர்வு செய்து, அனைத்து போட்டியாளர்களாலும் தேர்வு செய்யப்படும் நீதிபதி முன்பு வைத்து வாதாடி அதில் ஜெயிக்க வேண்டும் என்பது தான் நீதிமன்ற டாஸ்க்.
இதில் பல போட்டியாளர்கள் வைத்த வழக்கு தொடர்பாக நடந்த வாதம், அதிக விறுவிறுப்பை ஏற்படுத்தி இருந்தது. பல வழக்குகளில் எதிர்பாராத வகையில் தீர்ப்பு கிடைத்திருந்த நிலையில், சில வழக்குகள் சற்று வேடிக்கையாக சிரிப்பலை மோடிலும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற டாஸ்க்கின் இறுதியில், ராபர்ட் மாஸ்டர் மற்றும் குயின்சி ஆகியோர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தர்கள். அதே போல, வார இறுதியும் வந்து விட்டதால் இந்த வார எலிமினேஷன் குறித்தும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு வாரம் முடியும் போது, மிக முக்கியமான கட்டமாக டாஸ்க்கில் போட்டியாளர்களின் செயல்பாடுகளும் பார்க்கப்பட்டு வரும் சூழலில், அடுத்தடுத்து பிக்பாஸ் போட்டியாளர்கள் விளையாட்டு யூகம் எப்படி இருக்கும் என்பதை அறியவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
அப்படி ஒரு சூழலில், போட்டியாளர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அசீம் கருத்துக்கு ஜனனி சொன்ன விஷயம், அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அமுதவாணன், ஜனனி, தனலட்சுமி, அசீம் உள்ளிட்டோர் இரவு நேரத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பேசும் அசீம், "எனக்கு இப்போ Intererst இல்ல" என கூறியதும் "எதுக்கு?" என அமுதவாணன் கேட்கிறார். "இப்போ தலைவர் ஆக interest இல்ல" என அசீம் கூறிய மறுகணமே, "நீங்க ஆல்ரெடி அப்படி தான் இருக்கீங்க. நீங்க எங்க தலைவர் சொல்றத எல்லாம் கேட்டுட்டு பண்றீங்க" என சிரித்துக் கொண்டே ஜனனி கூறுகிறார்.
இதற்கு மத்தியில், 10 அல்லது 11 ஆவது வாரத்தில் தலைவராக வேண்டும் என்பது குறித்தும் ராம் மற்றும் அசீம் ஆகியோர் பேசிக் கொண்டிருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்ததடுத்து வரும் டாஸ்க்குகள் மற்றும் போட்டியாளர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட விஷயங்கள், யார் யார் எல்லாம் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருக்க போகிறார்கள் என்பதை முடிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.