"ரம்யாவுக்கு அதுதானே மக்கள் தீர்ப்பின் நிரூபணம்"... விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸில் கடந்த வாரம் இந்த சீசனுக்கான Freeze டாஸ்க் நடைபெற்றது. அதேபோல் பாலாஜி மற்றும் ஆரி இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. ரம்யாவிற்கும் ஆரிக்கும் இடையே கூட கருத்து வேறுபாடுகள் அதிகரித்தது. இந்நிலையில் பாச மழைக்கு நிகராக வன்முறைகள் நிறைந்த வாரமாக கடந்த வாரம் இருந்தது என்றே சொல்லலாம். இதனையடுத்து பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் மற்றும் இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் அப்போது ஒரு பதிவிட்டுருந்தார். அவர் கூறும் பொழுது "மக்களின் எண்ண ஓட்டத்தை நான் சரியாக கணித்திருந்தால். இந்த வாரம் சோம் மற்றும் ஷிவானி ஆரம்பத்திலேயே காப்பாற்றப்படுவார்கள். ரம்யா போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் வெளியிட்டிருக்கும் புதிய பதிவில் "இந்த வாரத்தின் தொடக்கத்தில் நான் சொல்லியிருந்தேன் - சோம் அல்லது கேபி முதலில் save ஆவார்கள்; ரம்யா வெளியேற்றப்படுவார் என்று. நான் தெரிந்துதான் ஆஜித்தை இரண்டாவது option-ஆக சொல்லவில்லை. நான் predict பண்ணியது என் விருப்பமல்ல; மக்களின் பரவலான உணர்வு. ரம்யா வெளியே அனுப்பப்பட மாட்டார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இதுவரை அதிகம் nominate கூட ஆகாத, ஆன சமயங்களிலும் முதலிலேயே save  ஆகிவிடுகிற ரம்யா, ஆஜித்துடன் இறுதி நொடிகளின் பதற்றத்தில் இருப்பதுதானே உங்கள் தீர்ப்பின் நிரூபணம்! சில போட்டியாளர்கள் மக்களை குறைவாக மதிப்பிட்டு விடுகின்றனர்" என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

James vasanthan on biggboss ramya and aajeth விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு

People looking for online information on James vasanthan will find this news story useful.