சூப்பர் ஸ்டாரை வாழ்த்திய ஜெயிலர் படக்குழு.. அதுவும் ரம்யா கிருஷ்ணன் வாழ்த்து தான் ஹைலைட் 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினி காந்த்.

Advertising
>
Advertising

Also Read | வைரலாகும் ஜிகர்தண்டா DOUBLE X போஸ்டர்கள்.. டிசைனர் இவரா? கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த அப்டேட்!

1975 ஆம் ஆண்டு மறைந்த இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "அபூர்வ ராகங்கள்" படத்தில் ரஜினிகாந்த் அறிமுகமானார்.

அதன்பிறகு வெற்றிப் படிக்கட்டில் பயணிக்க துவங்கிய ரஜினிகாந்த் தற்போது இந்திய சினிமாவின் ஐகான்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

ரஜினி காந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் அடுத்த 169வது படமான ஜெயிலர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தினை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.

டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் நடித்திருந்தார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது.

பீஸ்ட் படத்தினைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படத்தினை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் இந்த படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகிறார்.

இந்நிலையில் ஜெயிலர் படக்குழு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், நடிகர்கள் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, இயக்குனர் நெல்சன் திலீப்குமார், கலை இயக்குனர் கிரண், ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் ஆகியோர் வாழ்த்தியுள்ளனர்.

குறிப்பாக ரம்யா கிருஷ்ணன், படையப்பா படத்தில் வரும், "வயசானாலும் உங்கள் அழகும் ஸ்டைலும் உங்களை விட்டு போகல" எனக் கூறி "என்னுடைய படையப்பா, ஜெயிலருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" என வாழத்தியுள்ளார்.

 

Also Read | மெட்ரோ ரயிலில் வாரிசு படத்தின் போஸ்டர்கள்.. ரயில் முழுக்க தளபதி தான்.. மாஸ் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Jailer Team Wishes Super Star Rajinikanth Birthday

People looking for online information on Jailer, Jailer Team, Jailer Team Wishes Rajinikanth Birthday, Rajinikanth, Ramya Krishnan will find this news story useful.