கர்நாடகாவில் பிரபல நடிகருடன் ரஜினிகாந்த்.. ஜெயிலர் ஷூட்டிங்?.. தீயாய் பரவும் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | என்ன? இந்த சீசன்ல இவங்க கண்ணம்மா இல்லயா? யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. Bharathi Kannamma 2

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தினை இயக்குகிறார். இந்த படத்தையும் அணணாத்த படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Images are subject to © copyright to their respective owners.

கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்நாளில் ஜெயிலர் படத்தின் குறு முன்னோட்டம் வெளியானது. முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், தமன்னா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  ஜெயிலர் படத்தின்  படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் நகரில் நடைபெற்றது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மங்களூர் நகரில் நடைபெற உள்ளது என்று கூறப்படுகிறது. படத்தில் நடிக்கும் நடிகர் ஜாபர் சாதிக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மங்களூரில் இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ஹோட்டல் ஶ்ரீனிவாஸ் முகப்பில் இருந்து எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய வீடியோ காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவ ராஜ்குமார் & சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் சந்தித்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Also Read | குட் நியூஸ் சொன்ன கண்மணி & நடிகர் நவீன் 😍.. வாழ்த்து மழையில் தம்பதியர்!

தொடர்புடைய இணைப்புகள்

Jailer Super Star Rajinikanth in Mangalore with Shiva Rajkumar

People looking for online information on Jailer, Mangalore, Rajinikanth, Shiva Rajkumar, Super Star Rajinikanth will find this news story useful.