நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் ஜெய் –சுசீந்திரன்…. TITLE உடன் வெளியான செம்ம POSTER

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெய் சுசீந்திரன் கூட்டணியில் உருவான குற்றம் குற்றமே திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

Advertising
>
Advertising

ஜெய் சுசீந்திரன் கூட்டணியில் வீரபாண்டிபுரம்…

'வெண்ணிலா கபடிக்குழு', நான் மகான் அல்ல, ஜீவா, பாண்டியநாடு, மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களின் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழ்பவர் சுசீந்திரன். இயக்குனர் சுசீந்திரன் சிம்புவை வைத்து கடைசியாக 'ஈஸ்வரன்' படத்தை இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து ஜெய்யுடன் முதல் முறையாக இணைந்து பணியாற்றிவரும் திரைப்படம் 'சிவ சிவா' கிராமத்து கதையம்சத்தை கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர், பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. பின்னர் இந்த படம் வீரபாண்டிபுரம் என பெயர் மாற்றப்பட்டு திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்துக்கு நடிகர் ஜெய் இசையமைத்திருந்தார்.

இரண்டாவது முறையாக இணைந்த கூட்டணி…

ஜெய் சுசீந்திரன் கூட்டணி மீண்டும் ஒரு முறை இணைந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் பற்றி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த படத்தை ஆக்ஸஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்தில் ஜெய்யுடன், பாரதிராஜா, ஹரீஷ் உத்தமன், ஸ்ம்ரிதி வெங்கட், திவ்யா துரைசாமி, காளி வெங்கட், பாலசரவணன் என பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

கலைஞர் தொலைக்காட்சி்யில் நேரடி வெளியீடு…

இந்நிலையில் தற்போது இந்த படம் நேரடியாக கலைஞர் தொலைக்காட்சியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் போஸ்டரும் வெளியாகியுள்ளது. படத்துக்கு ‘குற்றம் குற்றமே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கலைஞர் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதற்கு முன்னர் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் நடித்த புலிக்குத்தி பாண்டி என்ற திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Jai susienthiran combo kutram kutramae direct television release

People looking for online information on Jai, Kalaignar TV, Kutram kutrame, Susienthiran will find this news story useful.