ஜெய் பீம் படத்தை அடுத்து இயக்குனர் ஞானவேல் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் பிரத்யேக தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
Also Read | இந்திய அளவில் ரசிகர்களை கவரும் "காந்தாரா".. வெளியான மிரட்டலான தமிழ் டிரெய்லர்!
'ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் கடந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ரிலீஸ் ஆனது.
'ஜெய் பீம்' திரைப்படம், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தமிழகத்தில் 1995-ல் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை உருவாக்கினார். இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்திருந்தார் சூர்யா.
பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞராக, முன்னாள் நீதியரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு பகுதியை எடுத்து இந்த திரைப்படம் உருவானது. ’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டராக ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநராக கதிர் ஆகியோர் பணியாற்றினர்.
இப்படத்தினை சூர்யா & ஜோதிகா தயாரிக்க, ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணை தயாரிப்பாளராக பணியாற்றினார்.
இந்நிலையில் ஞானவேல் இயக்கும் அடுத்த திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ தளத்திற்காக இயக்க உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் மறைந்த சரவண பவன் நிறுவனர் ராஜகோபாலன் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக உள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு "தோசா கிங்" என பெயரிடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read | BREAKING: நாக சைதன்யா & வெங்கட் பிரபு இணையும் புதிய படத்தில் இணைந்த பிரபல நடிகை! செம்ம