தியேட்டர் ரிலீஸ்க்கு அப்றம் தானே ஓடிடில வரும்?.. வரலாற்றை மாற்றிய சூர்யாவின் ஜெய்பீம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | அட.. ஐஸ்வர்யா ராயின் ‘உசுரே போகுது’ ரீகிரியேஷன் பாடலில் நடிச்ச வைரல் பெண்.. வீடியோ

ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் கடந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ரிலீஸ் ஆனது.

'ஜெய் பீம்' திரைப்படம், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில்  தமிழகத்தில் 1995-ல் நடந்த சம்பவங்களைக் கொண்டு இயக்குனர் த.செ.ஞானவேல் கதையை உருவாக்கினார். இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா நடித்தார்.

பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழ்க்கறிஞராக, முன்னாள் நீதியரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு பகுதியை எடுத்து இந்த திரைப்படம் உருவானது. படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்தார். ’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்தார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டராக ஃபிலோமின்ராஜா & கலை இயக்குநராக கதிர் ஆகியோர் பணியாற்றினர்.

'ஜெய்பீம்' ரிலீசான சமயத்தில் படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் பா ரஞ்சித், நல்லகண்ணு, சத்யராஜ், சீமான், பாரதிராஜா உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பல வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்தப் படத்திற்கு ஏராளமான பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்தது.

ஆஸ்கார் விருது யூடியூப் சேனலில் ஜெய்பீம் திரைப்படத்தின் காட்சி இடம் பெற்றது. முதன்முதலாக தமிழ் படங்களில் ஜெய்பீம் படத்தின் காட்சி தான் ஆஸ்கார் யூடியூப்பில் இடம் பிடித்தது. மேலும் 94 வது ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் (சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலில் 276 படங்களில்) ஒரு படமாக ஜெய்பீம் இடம் பெற்றது.

மேலும் ஒரு மணிமகுடமாக கோல்டன் குளோப் விருதுக்கு ‘சிறந்த ஆங்கிலம் அல்லாத திரைப்பட’த்துக்கான பிரிவில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் இந்தியா சார்பாக இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் சூர்யா, தனது 47வது பிறந்தநாளை வரும் ஜூலை 23 ஆம் நாள் கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள பாடி க்ரீன் சினிமாஸில் 'ஜெய்பீம்' திரைப்படம் திரையிடப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.

Also Read | Baakiyalakshmi: "அம்மா இல்லாதப்பதான் அருமை தெரியும்..".. கதறி அழுத இனியாவுக்கு ரசிகர்கள் ஆறுதல்.!

தொடர்புடைய இணைப்புகள்

Jai Bhim Releasing Theatres for Suriya Birthday

People looking for online information on Jai Bhim Movie, Jai Bhim Release in Theatres, Suriya, Suriya birthday, Suriya Jai Bhim Movie will find this news story useful.