JAI BHIM : சென்னை புத்தக கண்காட்சியில் ‘ஜெய் பீம்’ நூல்!.. அறிமுகம் செய்த சூர்யா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜோதிகா & சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகியுள்ள படம் ஜெய் பீம்.

Advertising
>
Advertising

Also Read | போடு! நம்ம பாக்கியலட்சுமி எழில்.. சைலண்ட்டா நடிச்ச ரொமாண்டிக் வீடியோ.. வெளியான டீசர்..!

படத்தில் சூர்யாவுடன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். த.செ.ஞானவேல் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தமிழகத்தில் 1990களில் பழங்குடி இருளர் இன இளைஞர்களை சந்தேக திருட்டு கேஸில் பிடித்துக்கொண்டு மனித உரிமை மீறலை நிகழ்த்தும் போலீஸாரின் கோர பக்கத்தை தோலுரிக்கிறது படம். வழக்கறிஞர் சந்துருவாக வரும் சூர்யா, இப்படத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுத்தர போராடுகிறார்.

இப்படத்தில் இருளர் இன தம்பதியாக வரும் மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடித்துள்ளனர். ஜெய் பீம்' திரைப்படம் கடந்தாண்டு அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில்  தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ரிலீஸ் ஆனது. தவிர, ஆஸ்கார் விருது யூடியூப் சேனலில் ஜெய்பீம் திரைப்படத்தின் காட்சி இடம் பெற்றது. ஆம், முதன்முதலாக தமிழ் படங்களில் ஜெய்பீம் படத்தின் காட்சி தான் ஆஸ்கார் யூடியூப்பில் இடம் பிடித்தது. மேலும் 94 வது ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் (சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலில் 276 படங்களில்) ஒரு படமாக ஜெய்பீம் இடம் பெற்றது.

இந்நிலையில் ‘ஜெய் பீம்’ திரைப்பட கலந்துரையாடலுடன் கூடிய திரைக்கதை, இந்த 2023 சென்னை புத்தகக் கண்காட்சியில்  புத்தகமாக கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஜோதிகா & சூர்யா, 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம், “ஜெய்பீம் திரைப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் உரையாடலுடன் கூடிய திரைக்கதையை அ ருஞ்சொல் ஆசிரியர் சமஸ்நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்.  2023 சென்னை புத்தகக்காட்சிக்கு, 2டி எண்டெர்டெய்ன்மெண்ட்டுடன் இணைந்து கொண்டுவரவிருக்கும் ஜெய்பீம் நூலின் அட்டையை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி” என குறிப்பிட்டுள்ளது.

Also Read | அட.. குட் நியூஸ் சொன்ன ‘சரவணன் மீனாட்சி’ செந்தில் - ஸ்ரீஜா.! குவியும் வாழ்த்துக்கள்.!

தொடர்புடைய இணைப்புகள்

Jai bhim book launched by suriya chennai book fair 2023

People looking for online information on ChennaiBookFair, Jai Bhim, Jai bhim book, JaiBhim, Suriya will find this news story useful.