ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ரிலீஸ் ஆனது.
ஜெய் பீம்' திரைப்படம், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தமிழகத்தில் 1995-ல் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை உருவாக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா.
பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழ்க்கறிஞராக, முன்னாள் நீதியரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு பகுதியை எடுத்து இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். ’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டர் ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநராக கதிர் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் IMDb தளத்தில் ரசிகர்கள் செலுத்தும் வாக்குகள் அடிப்படையில் தற்போது ஜெய்பீம் 70000 வாக்குகளுடன் 9.6 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த இடத்தில் இதற்கு முன் தி ஷஷாங்க் ரெடம்ப்ஷன் திரைப்படம் 24 லட்சம் வாக்குகளுடன் 9.3 புள்ளிகளை பெற்றது. மூன்றாவது இடத்தில் காட்பாதர் படம் 17 லட்சம் வாக்குகளுடன் 9.2 புள்ளிகளை பெற்றுள்ளது.
இதேவேளையில், சிறந்த 250 படங்களின் பட்டியலில் 8.2 புள்ளிகளுடன் 139 வது இடத்தை பிடித்துள்ளது.