ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ரிலீஸ் ஆனது.

ஜெய்பீம்' படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் பா ரஞ்சித், நல்லகண்ணு, சத்யராஜ், சீமான், பாரதிராஜா உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்திற்கு ஏராளமான பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்தது.
ஜெய்பீம் படம் கோல்டன் குளோப் விருதுக்கு ‘சிறந்த ஆங்கிலம் அல்லாத திரைப்பட’த்துக்கான பிரிவில் ‘ஜெய்பீம்’ திரைப்படமும் இந்தியா சார்பாக இடம் பெற்றுள்ளது. 'ஜெய் பீம்' திரைப்படம், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தமிழகத்தில் 1995-ல் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை உருவாக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா. இந்நிலையில் கூகுளில் இந்த வருடம் 2021ல் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்களில் ஜெய்பீம் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் விஷ்ணுவர்தன் இயக்கிய ஷேர்ஷா படமும், 3-வது இடத்தை சல்மான்கானின் ராதே படமும் பிடித்துள்ளன. 6வது இடத்தை விஜய் - விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் படம் பெற்றுள்ளது.