'லீக்' ஆன படுக்கையறை புகைப்படம்! நீதி வெல்லும் என அறிக்கை விட்ட நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோசடி நபருடன் 'லீக்' ஆன படுக்கையறை புகைப்படம் குறித்து முதல்முறையாக நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் அறிக்கை பதிவிட்டுள்ளார். 

jacqueline fernandez opens up on leaked photo controversy
Advertising
>
Advertising

நடிகை ஜாக்குலினுக்கு படுக்கையில் தரகர் சுகேஷ் முத்தம் கொடுக்கும் புகைப்படம் வைரலாகி பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது. சில மாதம் முன் சுகேஷ் சந்திரசேகருக்கு நடிகை ஜாக்குலின் படுக்கையறையில் முத்தம் கொடுக்கும் செல்பி புகைப்படம் வெளியாகி இந்தி திரையுலகில் பரபரப்பை கிளப்பியது. சில மாதம் முன்பு புகைப்படங்கள் வெளியானபோது ஜாக்குலின்  எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

jacqueline fernandez opens up on leaked photo controversy

ஆனால் நேற்று வெளியான புகைப்படம் குறித்து நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் முதல் முறையாக இன்ஸ்டாகிராம் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில் "இந்த நாடும் அதன் மக்களும் எப்போதும் எனக்கு மிகுந்த அன்பையும் மரியாதையையும் அளித்துள்ளனர். இதில் எனது ஊடக நண்பர்களும் அடங்குவர், அவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் தற்போது கடினமான சூழ்நிலையில் இருக்கிறேன், ஆனால் எனது நண்பர்களும் ரசிகர்களும் என்னைக் கைவிட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.

இந்த நம்பிக்கையுடன் எனது தனியுரிமை மற்றும் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடும் இயல்புடைய படங்களை பரப்ப வேண்டாம் என்று எனது ஊடக நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் இதைச் செய்ய மாட்டீர்கள், எனக்கும் இதைச் செய்ய மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். நீதியும் நல்லறிவும் வெல்லும் என்று நம்புகிறேன். நன்றி"  எனக் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன் சுகேஷ் சந்திரசேகரின் வழக்கறிஞர் ஆனந்த் மாலிக், ஜாக்குலின் பெர்னாண்டஸும் சுகேஷும் காதலித்து வந்தனர் என கூறியிருந்தார். இதை ஜாக்குலின் வழக்கறிஞர் மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. பல முறை விசாரணை நடத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஜாக்குலினை வெளிநாடு செல்ல தடை போட்டுள்ளனர். ஜாக்குலின் தாயார் வெளிநாட்டில் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.சில நாட்களுக்கு முன் இது பற்றி தகவல் வெளியானது.  இதனால் ஜாக்குலின் தாயை கூட பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

பெங்களூரை சார்ந்த சுகேஷ் சந்திரசேகர் எனும் நபர் அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்களை ஏமாற்றியும், பலருக்கு வேலை வாங்கி தருவதாகவும் மோசடி செய்த வழக்கில் கைதாகி உள்ளார். இதுவரை ரூ.200 கோடி மோசடி செய்து இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுகேஷ் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி, ரொக்கம், தங்கம், விலை உயர்ந்த சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்

Jacqueline fernandez opens up on leaked photo controversy

People looking for online information on Jacqueline Fernandez will find this news story useful.