'நடிகை டாப்ஸி.. இயக்குநர் அனுராக் காஷ்யப்' வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு!.. என்ன காரணம்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வரி ஏய்ப்புக்காக பாண்டம் பிலிம்ஸ் தொடர்பான நபர்களின் வீடுகளில் ஐ.டி துறை சோதனை நடத்தி வருகிறது.

இந்நிலையில் நடிகை டாப்ஸி பானு, தயாரிப்பாளர் மது மந்தேனா, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் மற்றும் விகாஸ் பஹ்ல் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறை திடீர் தேடுதல் சோதனை நடத்துகிறது.

பாண்டம் பிலிம்ஸ் என்பது ஒரு திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாகும், இது அனுராக் காஷ்யப், இயக்குனர் விக்ரமாதித்யா மோட்வானே, தயாரிப்பாளர் மது மந்தேனா மற்றும் விகாஸ் பஹ்ல் ஆகியோரால் 2011-ல் நிறுவப்பட்டது.

தமிழில் ஆடுகளம், ஆரம்பம், கேம் ஓவர் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை டாப்ஸி, இதேபோல் அனுராக் காஷ்யப் தமிழில் நயன்தாரா, அதர்வா நடித்த இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ALSO READ: “இந்திய அளவில் விவாதமான இந்த படம் தமிழ்ல வருது!”.. நிமிஷா கேரக்டரில் நடிக்கப்போறது யார்னு கெஸ் பண்ணுங்க?

IT raids Taapsee, Anurag Kashyap homes டாப்ஸி அனுராக் கஷ்யப்

People looking for online information on Anurag Kashyap, IR Raid, Tapsee pannu will find this news story useful.