“IT'S OVER” - அப்பாவுக்காக கவினுடனான காதலை முறித்த லாஸ்லியா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே பிக் பாஸ் வீட்டில் காதல் கிசுகிசுவில் சிக்கிய கவின், இறுதியாக லாஸ்லியாவுடன் காதலில் விழுந்தார். இந்த காதலுக்கு லாஸ்லியா வீட்டில் எதிர்ப்பு கிளம்ப கவினுடனான காதலை லாஸ்லியா முறித்துக் கொண்டார்.

பிக் பாஸ் வீட்டில் சாக்ஷி, கவின், லாஸ்லியா இடையில் மிகப்பெரிய பிரச்சனைகள் வெடித்த பிறகு, சாக்ஷி வெளியேற லாஸ்லியாவை நேசிப்பதை கவின் உறுதி செய்தார். இந்நிலையில், இந்த வாரம் Freeze டாஸ்கில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியாவின் பெற்றோர் அவரது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு விளையாட்டில் கவனம் செலுத்துமாறு அறிவுரை வழங்கினர்.

இதையடுத்து, லாஸ்லியாவுக்கு அறிவுரை வழங்கிய வனிதா, பிக் பாஸ் முடியும் வரை விளையாட்டில் கவனம் செலுத்துமாறு கூறினார். பின்னர், கவினுடன் இது குறித்து நீண்ட நேரம் பேசிய லாஸ்லியா, ஆரம்பத்தில் இருந்தது போல் சந்தோஷமாக இருக்க வேண்டும், நீயும் என்னை போல் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும், விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.

இந்த உரையாடல் முழுவதும் சோகமாக காணப்பட்ட கவின், தன்னை உனது குடும்பத்தினருக்கு பிடிக்காது என்று கூறியதை நடந்துவிட்டது என்றார். பிக் பாஸ் வீடு ரியாலிட்டி இல்லை, வெளி உலகம் இருக்கிறது, எனது குடும்பத்தினர் எனது நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவது முறையல்ல என கூறினார். அப்போது, ‘இது முடிஞ்டுச்சி’ என கூறினார். முடிந்தது எது என்று தெளிவாக கூறாட்டியும், லாஸ்லியாவின் தந்தையின் கோபத்திற்கு பிறகு அவர் கவினுடனான காதலை தான் முடித்துக் கொண்டிருப்பார் என கருதப்படுகிறது.

இதையடுத்து, நேற்றைய எபிசோடில், தர்ஷன், வனிதா, சேரன் குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர். தர்ஷனின் தாய் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். வனிதாவின் குழந்தைகள் பிக் பாஸ் வீட்டில் ஓடிப்பிடித்து விளையாடினர். சேரனின் மகள், இனி லாஸ்லியாவுடன் பேசக் கூடாது என எச்சரித்துவிட்டு சென்ற நிகழ்வுகள் ஹைலைட்டாக அமைந்தது.

தொடர்புடைய இணைப்புகள்

It is over Kavin, Losliya relationship status Bigg Boss Tamil 3

People looking for online information on Bigg Boss Tamil 3, Kavin, Losliya will find this news story useful.