தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானை சந்தித்து அந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
Also Read | நம்பி நாராயணன் கெட்டப்பில் மனைவியோடு மாதவன் … குடும்பத்தினர் ரியாக்ஷன்…. Viral Tweet
சிம்பு- கௌதம் மேனன் கூட்டணி
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான், சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகிய மூவர் கூட்டணி மூன்றாவதாக ஒரு படத்தில் இணைய உள்ளதாக அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. முதலில் அந்த படத்துக்கு ’நதிகளில் நீராடும் சூரியன்’ என்று தலைப்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அதற்கு பதிலாக ‘வெந்து தணிந்தது காடு’ என பெயரிடப்பட்ட புதிய படத்தை தொடங்கினர். இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
படப்பிடிப்பு
இந்த படத்துக்கு கௌதம் மேனனின் படங்களில் வழக்கமாக பாடல்கள் எழுதும் கவிஞர் தாமரை பாடலாசிரியராக ஒப்பந்தமாகியுள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுதியுள்ளார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் திருச்செந்தூரில் ஆரம்பமானது. பின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அதன் பின்னர் மும்பையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
ஐசரி கணேஷ் ட்வீட்
இதையடுத்து இந்த திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் படத்தின் இசையமைப்பாளர் AR ரஹ்மானை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பு குறித்து “மொசார்ட் ஆஃப் தி மெட்ராஸ் AR ரஹ்மானை சந்தித்தேன். அவரின் எளிமை மற்றும் தொலைநோக்கு பார்வை வியப்பை அளித்தன. எங்களின் அடுத்த படமான வெந்து தணிந்தது காடு குறித்து பேசினோம். ம்யூசிக்கல் ட்ரீட்டுடன் கூடிய அழகான திரைப்படம் விரைவில் வர இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
Also Read | சாய்பல்லவியின் ‘விராட பர்வம்’… தியேட்டர்களில் ரிலீஸாகி 15 நாட்களில் பிரபல ஓடிடியில்..