ராம்கோபால் வர்மாவின் அடுத்த சம்பவம் ’தகனம்’ …. விஜய் பட நடிகையின் கவனம் ஈர்க்கும் தொடர்…

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள வெப் தொடர் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | KGF 2 படத்தின் எடிட்டர் இந்த 19 வயசு பையனா? வெளிவந்த ஆச்சர்ய தகவல்

பாலிவுட்டில் இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கிய பல படங்களில் இஷா கோபிகர் நடித்துள்ளார். இவர் விஜய்யுடன் தமிழில் ’நெஞ்சினிலே’ படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். இந்நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ராம்கோபால் வர்மா இயக்கும் தகனம் என்ற தொடரில் முக்கியக் கதாபாத்திரத்தில் இஷா கோபிகர் நடித்துள்ளார். இந்த தொடர் நேற்று ஏப்ரல் 14 ஆம் தேதி  MX ப்ளேயரில் வெளியானது.

MX oriniginal…

MX ஒரிஜினல் தொடரான “தகனம்” தொடரின்  டிரைலர் ரசிகர்களது கவனத்தை ஈர்த்தது. இந்த MX ஒரிஜினல் தொடரில் இஷா கோபிகர், நைனா கங்குலி, அபிஷேக் துஹான், அபிலாஷ் சவுத்ரி, சாயாஜி ஷிண்டே, அஷ்வத்காந்த் சர்மா, பார்வதி அருண் மற்றும் பிரதீப் ராவத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வலுவான அழுத்தமான கதைக்களத்துக்காக அனைவராலும் விரும்பப்படும் இயக்குநர் ராம்கோபால் வர்மா, இயக்கியுள்ள முதல் வெப் தொடர் இதுவாகும். பல திரைப்படங்களில் ஒன்றாகப் பணியாற்றிய வர்மாவும் இஷா கோபிகரும் மீண்டும் இணைந்து, பணியாற்றுவதன் மூலம் ‘தகனம்’ தொடருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ராம்கோபால் வர்மா…

இந்த தொடர் பற்றி பேசியுள்ள வர்மா  “எனது முதல் OTT தொடரான “தகனம்” தொடரை  MX Player, உடன்  இணைந்து வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மகாத்மா காந்தி சொன்ன ‘கண்ணுக்குக் கண் உலகையே குருடாக்குவதில்தான் வெற்றியடையும்’, மகாபாரதத்தில் மேற்கோள் காட்டப்பட்ட ‘பழிவாங்குதல் என்பது தூய்மையான உணர்ச்சி’ என்ற இரு முரண்பாடான மேற்கோள்களுக்கு இடையில் உணர்வுப்பூர்வமான சம்பவங்களுடன் உருவாகியுள்ளதுதான் இந்த  கதை. தகனம் வெறும் பழிவாங்கும் கதையல்ல, பழிவாங்கும் உணர்வின் கதையைச் சொல்கிறது. இது ஒரு க்ரைம் த்ரில்லர் அல்ல, ஆனால் இது உங்களை உறைய வைக்கும், உணர்வுப்பூர்வமாக சிலிர்க்க வைக்கும், குற்றங்களைப் பற்றியது. இந்த தொடருக்காக தீவிரமான  மெத்தட் ஆக்டிங் நடிகர்களை தேடிதேடி தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த தொடருக்கு பார்வையாளர்கள் தரும் வரவேற்பை காண எங்கள் குழு முழுவதும் ஆவலுடன் காத்திருக்கிறது.

இஷா கோபிகர் கூறுகையில்…

இந்த தொடர் பற்றி பேசிய இஷா கோபிகர் “திரையில் இந்த சீருடை அணிய முடிந்ததை பெருமையாக உணர்கிறேன். இது ஒரு பெரிய பொறுப்பு மற்றும் நம்பிக்கையயைக் கொடுத்துள்ளது. இந்த சீருடையில் உள்ள அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் அயராது வேலை செய்கிறார்கள் மற்றும் ஏராளமான சவால்களை எதிர்கொள்கிறார்கள். இதனால் தான் நாம் அனைவரும் பாதுகாப்பாகவும் எளிதாகவும் இருக்க முடிகிறது. அவர்கள் உழைப்பை நான் பாராட்டுகிறேன், அதற்காக நான் அவர்களுக்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன். மேலும் அவர்களை திரையில் சித்தரிக்க முடிந்தது எனக்கு பெருமை. கடினமாக உழைத்து, க்ரைம் அதிகமாக இருக்கும் நகரில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, அமைதியைக் கொண்டுவரும் பாத்திரத்தில் நடிப்பதில் மிகுந்த  மகிழ்ச்சியாக உள்ளேன். இந்த பாத்திரம் உண்மையில் ஒரு நடிகராகவும் பெண்ணாகவும் என்னுடைய  சிறந்த திறமையை வெளிப்படுத்தியது. ராம்கோபால் வர்மாவின் உருவாக்கத்தில் மீங்டும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.” எனக் கூறியுள்ளார்.

Also Read | மாஸ்டர் J D பாட்டுக்கு குழந்தைகளோடு ஆடிய ’பீஸ்ட்’ வீரராகவன்… வைரலாகும் ‘பீஸ்ட்’ BTS வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Isha gopikar and Ram gopal varma webseries dhaganam

People looking for online information on தகனம், ராம்கோபால், வர்மா, வெப் தொடர், Dhaganam WebSeries, Isha Gopikar, OTT, Ram Gopal, Varma, Webseries will find this news story useful.