"BIGGBOSS ஸ்கிரிப்டா? FAKE-ஆ?".. ரசிகருக்கு பதில் அளித்த இசைவாணி! ELIMINATION-க்கு பின் முதல் நேரலை! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் அண்மையில் எலிமினேட் ஆனவர் இசைவாணி.

isaivani first short live video after elimination
Advertising
>
Advertising

பிரபல பாடகியான இசைவாணி, கானா ஸ்டைலில், எளிய நடையில் ஆழமான கருத்துக்களை எளிமையாக கொண்டுசென்று சேர்ப்பதில் கவனம் ஈர்க்கும் பாடல்களைப் பாடி பிரபலமானவர். பிக்பாஸ் போட்டியாளராக இணைந்த இசைவாணி பிக்பாஸ் வீட்டிலும் தொடக்கத்தில் இப்படியான பாடல்களை பாடி வந்தார்.

isaivani first short live video after elimination

அதன் பின்னர் டாஸ்குகள், சக போட்டியாளர்கள், நட்புறவு, உறவுச் சிக்கல்கள் என பிஸியாகிவிட்டார். எனினும், தான் தெளிவாக இருப்பதாகவும், மற்றவர்களால் கைப்பாவையாக பயன்படுத்தப்படவில்லை என்றும் அவ்வப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் இசைவாணி பதிவு செய்துள்ளார். எனினும் அண்மையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் ஒரு அருமையான மோட்டிவேஷன் பாடலை பாடி இசைவாணி வெளியேறினார்.

தற்போது தன்னுடைய ரசிகர்களுக்காக நேரலையில் இணைந்த இசைவாணி விரைவில் ஒரு நேரலையில் இணைய உள்ளதாகவும், அதற்கு முன்பாக தனக்கு ஓட்டுப் போட்ட ரசிகர்களுக்கு நன்றி சொல்வதற்காக வந்ததாகவும் குறிப்பிட்டு பேச தொடங்கினார்.

அப்போது சிலர் இசைவாணி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் பிக்பாஸ் பார்ப்பதே இல்லை என்று கூறியதற்கு பதிலளித்த இசைவாணி, “அப்படியெல்லாம் அவசியமில்லை பிக்பாஸ் பாருங்கள்! உங்களுக்கு பிடித்தவர்களுக்கு தொடர்ந்து ஓட்டு போடுங்கள்!” என்று குறிப்பிட்டார்.

இதேபோல், தான் வெளியே வந்தது குறித்து வருத்தமடையும் ரசிகர்களுக்கு, “கவலைப்படாதீர்கள்.. ஹேப்பி ஆக இருங்கள்.. உங்கள் நம்பிக்கை வீணாகாது!” என்று தெரிவித்திருக்கிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் தனக்கு பிடித்த நெருங்கித் தோழியாக பாவனியை குறிப்பிட்ட இசைவாணி, பிக்பாஸ் ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட ஒன்றா? Fake- என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, “பிக்பாஸ் ஸ்கிரிப்ட் எல்லாம் இல்லை!” என்று பதில் கூறினார்.

"BIGGBOSS ஸ்கிரிப்டா? FAKE-ஆ?".. ரசிகருக்கு பதில் அளித்த இசைவாணி! ELIMINATION-க்கு பின் முதல் நேரலை! வீடியோ வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Isaivani first short live video after elimination

People looking for online information on Biggboss, BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, IsaiVaani, Isaivani will find this news story useful.