நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது. S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | LEO : மைனஸ் 5 டிகிரியிலயா.. விஜய் நடிக்கும் லியோ பட ஷூட்டிங்.. காஷ்மீர்ல எங்க? செம அப்டேட்..!
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.
இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர்.
இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் லியோ படம் வெளியாக உள்ளது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இதனிடையே, லியோ திரைப்படம், லோகேஷ் யூனிவர்ஸில் இணைந்து விக்ரம், கைதி உள்ளிட்ட திரைப்படங்களுடன் தொடர்புபடுத்தி வருமா என்ற கேள்வி எழாமல் இல்லை. லியோ டைட்டில் வீடியோ மற்றும் விக்ரம், கைதி உள்ளிட்ட படங்களில் வரும் காட்சிகளை ஒப்பிட்டு பல்வேறு கருத்துக்களையும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
அப்படி ஒரு சூழலில், தற்போது விக்ரம் படத்தில் வரும் வசனம் குறித்த செய்தியும் பலரது கவனம் பெற்று வருகிறது. ஜோஸ் என்ற கதாபாத்திரத்தில் வரும் நடிகர் செம்பன் வினோத் ஜோஸ், அமர் கதாபாத்திரத்தில் வரும் பகத் பாசில் பற்றி பேசும் போது, காஷ்மீருக்கு Case விஷயமாக செல்லும் போது அமர் (பகத்) பழக்கம் ஆனதாக குறிப்பிடுவார்.
இதனிடையே, தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பும் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதனால், இந்த வசனத்தின் அடிப்படையில் விக்ரம் மற்றும் லியோ படத்திற்கு இடையே கனெக்ஷன் உள்ளது என்றும் ரசிகர்கள் குறிப்பிட தொடங்கி விட்டனர்.
Also Read | "நான் சொன்னதுனால தான் அப்பா கூட்டிட்டு போனாரு".. தென்காசி இளைஞர், குஜராத் பொண்ணு விஷயத்தில்