நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல ஓடிடி தளம் வாங்கி இருப்பதாக வெளியான தகவல்களில் இருக்கும் உண்மைத் தன்மையை பற்றி தயாரிப்பு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை சன்ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. இதனிடையே இந்த திரைப்படத்தை பிரபல ஓடிடி தளம் ஒன்று வாங்கியிருப்பதாக தகவல்கள் ஆங்காங்கே பரவி வந்தன.
பொதுவாக இப்போது வரக்கூடிய படங்கள் பலவும் ஓடிடி தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார் போன்ற தளங்களில் நேரடியாக வெளியாகியும், சில படங்கள் திரையரங்கு ரிலீஸ்க்கு பிறகு இந்த தளங்களில் ஒளிபரப்பாகியும் வருகின்றன. இந்நிலையில் கோப்ரா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் வாங்கி இருப்பதாக ஆங்காங்கே தகவல்கள் பரவி வந்தன.
இந்த நிலையில்தான் இது ஒரு பொய்யான தகவல், இதில் உண்மை இல்லை என்று இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸெவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தம்முடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது. அதன்படி இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாக ட்விட்டரில் வெளிவந்த தகவல்கள்‘ Fake News’ என்று இந்த தயாரிப்பு நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதனிடையே நடிகர் விக்ரம் நடித்து வரும் சியான்60 படத்தை சந்தோஷ் நாராயணன் இசையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.
ALSO READ: 'கர்ணன்' படத்த பத்தி விஜய் சேதுபதி சொன்னது என்ன தெரியுமா? வைரல் ஆகும் ட்வீட்!