வனிதா வெளியே போயிட்டாரா? .. ப்ரோமோவுல காணும்?.. என்ன ஆச்சு? BIGGBOSSULTIMATE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBossUltimate: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்கள் நிறைவடைந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி டிஸ்னி+ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் நேரலையில் ஒளிபரப்பாகி வருகிறது.

Advertising
>
Advertising

காபி பொடியை எடுத்துக்கொண்ட வனிதா

இதில் முதற்கட்டமாக வைக்கப்பட்ட டாஸ்கை அடுத்து, வனிதா விஜயகுமார் தனக்கு காப்பி பொடி கிடைத்து விட்டதாகவும், அது தன் டீம் ஜெயித்ததால் தான் கிடைத்து என்றும் கூறி அந்த காபி பொடியை எடுத்துச் சென்றுவிட்டார். அதன் பின்னர் அதை தானே வைத்துக் கொள்ளவும் நிர்வகிக்கவும் முயற்சித்து தன் இருப்பிடத்தில் சென்று வைக்க பார்த்தார்.

Also Read: "தாத்தா 15 வருஷம் ஜெயில்".. "பாட்டிய 32 முறை சுட்டாங்க".. "அப்பா...".. நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி உருக்கம்.

வனிதா - அபிராமி சண்டை

ஆனால் அதற்குள் அங்கு வந்து வனிதா விஜயகுமாரை பிடித்துவிட்ட அபிராமி,  “இதை நீங்கள் ஜெயிப்பதற்கு நாங்கள் விளையாடியதும் தான் காரணம்” என்று கூற இருவரும் ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றம்சாட்டி வாக்குவாதம் செய்ய தொடங்கிவிட்டனர். அப்போது இது கேவலமாக இருக்கு என்று அபிராமியிடம் வனிதா கூற, பதிலுக்கு அபிராமியும் வனிதாவிடம், “நீங்கள் பண்ணுவதுதான் கேவலமாக இருக்கு” என்று சொல்ல, மாற்றி மாற்றி இப்படி இருவரும் சண்டை போட்டுக் கொண்டனர்.

இதில் கடுப்பான வனிதா விஜயகுமார் இந்த காப்பி பொடியே எனக்கு தேவையில்லை என்று சொல்லி காபி பொடி டப்பாவை தூக்கி வீசி விட்டு சென்று விட்டார். அதன் பிறகு நடிகை வனிதா விஜயகுமார், ஒரு ஆடியோவில், “பிரச்சனையே இல்லை என்பதால் இப்படி பிரச்சனையை உருவாக்குகிறீர்களா பிக்பாஸ்?” என்று சொல்லி கதறியிருந்தார். அந்த ஆடியோவும் பிரத்தியேகமாக வெளியாகியிருந்தது.

வனிதா வெளியே போயிட்டாரா? .. ப்ரோமோவுல காணும்

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் வனிதா விஜயகுமார் கேட்டபடி அவருக்கு அந்த காப்பி பொடியை கொடுத்து விடுங்கள். அவர் வெளியே செல்வதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் சொன்ன மாதிரி அவர் வெளியே சென்றுவிட்டால் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்காது என்று தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். ஆனால், பலரும் வனிதா விஜயகுமார் அப்படி எல்லாம் வெளியே போவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறியும் வந்தனர். இதற்கு தகுந்தாற்போல் வனிதா இடம்பெறாத ப்ரோமோவும் அடுத்தடுத்து வெளியானது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் வனிதா வெளியேறி விட்டார் தான் என்றும் கூறி வருகின்றனர்.

முன்னதாக கேப்டன்சி ரிப்போர்ட்டில் கேப்டன் ஷாரிக் ஹாசன், வனிதாவை  குறிப்பிட்டு, “நீங்கள் கோபப்படுவது மற்றவர்களை பாதிக்கிறது!” என்று சொல்லி மார்க் போட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்பை போல் அல்லாமல் இந்த ஓடிடி நிகழ்ச்சி, எந்தவித சென்சார் கட் மற்றும் பெரிய அளவிலான காட்சிகள் கட் பண்ணப்படுவது உள்ளிட்ட விஷயங்கள் இல்லாமல் நடக்கிறது.

பெரும்பாலும் ஒரு நாள் முழுவதும் நடக்கக் கூடிய விஷயங்களை 24 மணி நேரமும் நேரலையில் காட்டப்பட்டு வருகிறது. அதே போல் இந்த நிகழ்ச்சியின் 24 மணிநேரமும் நேரலை காட்சி ஓடிக் கொண்டிருப்பது போல, மொத்த நிகழ்ச்சியும் ஒரு மணி நேரமாக இரவு 9 மணிக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தினமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தாமரை அக்கா எல்லாம் தெரியும்.. நடிக்காதீங்க.. பிரபல போட்டியாளர் போட்ட மார்க்!

தொடர்புடைய இணைப்புகள்

Is vanitha went out of biggbossultimate coffee powder issue

People looking for online information on BBUltimateTamil, BiggBossTamil5, BiggBossUltimate, BiggBossUltimateTamil, Vanitha Vijayakumar will find this news story useful.