BREAKING: வாரிசு படத்தின் நெல்லை & குமரி ஏரியா உரிமம்.. கைப்பற்றிய பிரபல வினியோகஸ்தர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் திருநெல்வேலி & கன்னியாகுமரி ஏரியா உரிமம் குறித்த தகவல் பிரத்யேகமாக நமக்கு கிடைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பிரபல STYLIST-வுடன் விக்னேஷ் சிவன் & நயன்தாரா.. இணையத்தை கலக்கும் CUTE செல்ஃபி போட்டோஸ்!

தளபதி விஜய்யின் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜுவின் தயாரிப்பில் 'வாரிசு' படம் உருவாகி வருகிறது.

'வாரிசு' படத்தை தேசிய  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

வாரிசு படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில், கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதம்   நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு  சில நாட்களுக்கு முன் சென்னையில் துவங்கியது. இதில் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் இரண்டு பாடல் காட்சிகள் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட உள்ளன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியில் நடந்து வருகிறது.

பொங்கலுக்கு ரிலீஸாகும் வாரிசு படத்தின் ஐரோப்பிய தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் உமா மகேஸ்வர ராவ் கண்டா  கைப்பற்றி உள்ளார். இந்த படத்தை தனது 4சீசன்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் ஐரோப்பா முழுவதும் வினியோகம் செய்ய உள்ளார்.

மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் கைப்பற்றி உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் திருநெல்வேலி கன்னியாகுமரி ஏரியா ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே விஜய் & விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படத்தை திருநெல்வேலி கன்னியாகுமரி ஏரியாவில் வினியோகம் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | வாரிசு படத்தின் 'ரஞ்சிதமே' பாட்டுக்கு டான்ஸ் ஆடிய நடிகை ஹரிஜா.. படு வைரலாகும் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Is this Vijay Varisu TK Area Distribution by Muthukani

People looking for online information on Varisu, Varisu Movie Update, Vijay will find this news story useful.