தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி 'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.
Also Read | துணிவு சில்லா சில்லா பாட்டு எப்படி இருக்கு? செம்ம பதில் அளித்த லோகேஷ்!
'வாரிசு' படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.
தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரிசு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை Phars Films நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் கைப்பற்றி உள்ளார்.
இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான க்ரீன் ஸ்கிரீன் நாராயணசாமி கைப்பற்றி உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாராயணசாமி ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா, தெறி படங்களை வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தின் திருநெல்வேலி கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே மாஸ்டர் படத்தை வினியோகம் செய்தவர் ஆவார்.
இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியன் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், வாரிசு படத்தின் செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய 4 ஏரியாக்கள் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது என திருப்பூர் சுப்ரமணியன் கூறியுள்ளார். மேலும் வாரிசு படத்தின் தமிழக ரிலீஸை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மேற் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார்.
Also Read | வாரிசு ரிலீஸ்க்கு அப்பறம் தான்.. தளபதி 67 அப்டேட்.. லோகேஷ் கனகராஜ் கொடுத்த தகவல்!