பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த வாரம் ஒரு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதாவது பிக்பாஸ் வீடு ஒரு கோழி பண்ணையாகவும், பாதி பேர் கோழிகளாகவும், பாதி பேர் நரிகளாகவும் இருந்து முட்டைகளை திருட வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்கில் போட்டியாளர்களுக்கு மட்டுமில்லை, பார்வையாளர்களுக்கும் பல குழப்பங்கள் இருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் இந்த வாரத்தின் சுவாரசியம் குறைந்த போட்டியாளரை தேர்ந்தெடுக்கும் படி பிக்பாஸ் தனது ராஜதந்திரத்தை வழக்கம்போல் அவிழ்த்து விட்டார். அப்பொழுது பலரும் ஷிவானி மற்றும் கேபியை குறிவைக்க பாலா திடீரென அனிதாவின் பெயரை சொல்லியது பலருக்கும் வியப்பாக தான் இருந்திருக்கும். அதற்கு காரணமாக "அனிதா ஒருமுறை கூட பாத்ரூம் கிளீனிங் வேலை செய்யவில்லை. அதை கற்றுக் கொள்ள கூட முயற்சிக்கவில்லை என்று கூறினார்.
ஏனென்றால் அனிதாவும் பாலாஜியும் பல விஷயங்களை ஒன்றாக கலந்து ஆலோசிப்பவர்கள். இருவருக்கும் இந்த வீட்டில் வந்த பஞ்சாயத்துகளும் வெகு சிலவே. சுசித்ரா பிக்பாஸில் இருந்து வெளியேவந்த பிறகு அளித்த பேட்டியில் கூட "அனிதாவும் பாலாஜியும் நல்ல நண்பர்கள் பல விஷயங்களை அவர்கள் பேசுவது உண்டு" என்று கூறியிருந்தார். இந்நிலையில் வெளியாகியிருக்கும் ஒரு Unseen வீடியோவில் தன்னை நாமினேட் செய்ய காரணம் அன்று காலை இருவருக்கும் ஏற்பட்ட ஒரு மன வருத்தம் தான் என்று அனிதா ரம்யாவிடம் கூறுவதை பார்க்க முடிகிறது.