பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடிக்கப் போகும் நடிகை இவரா?... வைரலாகும் தகவல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து இருந்தாலும் இந்த தொடர் மூலம் வேற லெவல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இந்நிலையில் அவர் மரணமடைந்த செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவருடைய பாசிட்டிவ் குணம் தான் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்தது.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்து யார் சித்ராவாக நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதே நிலையில் செம்பருத்தி சீரியலில் இருந்து திடீரென நீக்கப்பட்ட நடிகை ஜனனி இந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற செய்தி வைரலானது. இதுபற்றி அவர் கூறும்போது "சித்ரா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. என்னாலும் முடியாது. சித்ரா முல்லையாக வாழ்ந்திருக்கிறார். எனக்கு தெரிந்து நான் அதற்கு தகுதி இல்லை" என்பது போல அவர் கூறியுள்ளார். இந்நிலையில் சமூக வலைதளத்தில் வைரலாகும் தகவல் என்னவென்றால் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதிக்கு தங்கையாக நடிக்கும் காவ்யா அடுத்து முல்லை கதாபாத்திரத்தில்  நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடிக்கப் போகும் நடிகை இவரா?... வைரலாகும் தகவல்..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Is this popular actress to replace mullai in pandiyan stores

People looking for online information on Chitra, Pandiyan Stores will find this news story useful.