விஜய் டிவி சீரியலில் இருந்து விலகும் ரச்சிதா.. இவருக்கு பதில் இனி நடிக்கப் போவது இவரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வந்த நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அண்மையில் நேரடியாகவே ஹிண்ட் கொடுத்து அறிவித்திருந்தார்.

Advertising
>
Advertising

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி இரண்டாம் சீசன் மூலமாக பாப்புலர் ஆன  ரச்சிதா, நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாம் சீசனில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இருந்தே ரச்சிதாவின் காட்சிகள் குறைந்தன.

இதனிடையே ரச்சிதா கன்னட திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருந்ததாக குறிப்பிட்டிருந்ததை அடுத்து, அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரச்சிதா கலந்துகொண்ட புகைப்படங்களையும் அவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது ரச்சிதா நாம் இருவர் சீரியலுக்கு குட்பை சொல்லும் விதமாக, அவர் தமது இன்ஸ்டாகிராமில் 'பை மஹா' என குறிப்பிட்டு போஸ்ட் போட்டு அதிரவைத்தார். இன்னொரு பதிவில், இந்த சீரியலில் தன்னுடைய இருப்பும் இல்லாமையும் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று குறிப்பிட்டிருந்த ரச்சிதா, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது கஷ்டமாக இருந்தாலும் இது ஒரு ஃபிக்‌ஷன் கேரக்டர் தானே.. என்றும் ரசிகர்களுக்கு சமாதானம் கூறினார்.

இந்நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் புதிய மகாவாக இனி அரண்மனைக்கிளி தொடரில் நாயகியாக நடித்த மோனிஷா நடிக்கப் போவதாக உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் ரசிகர்கள் தரப்பில் வைரலாகி வருகின்றன.

மோனிஷா என்பதை விடவும் அரண்மனைக்கிளி ஜானு என்றால் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான விளங்கும் மோனிஷா, தான் நடித்து வந்த சீரியலுக்கு பிறகு வேறு சீரியல்களில் தலை காட்டவில்லை. அரண்மனைக் கிளி சீரியலும் கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டு மீண்டும் தொடரப்படவில்லை.

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த நடிகை மோனிஷா  நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் புதிய மகாவாக இனி நடிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வலம் வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Is this popular actress replaces nam iruvar namaku iruvar maha

People looking for online information on Aranmanaikili, Monisha, Nam iruvar namaku iruvar, Namiruvarnamakuiruvar, Rachitha, Rachitha Mahalakshmi, TV Actress, Tv Serial, Vijay tv serial will find this news story useful.