நம்ம கௌதமியா இது..? ட்ரெண்டாகும் கௌதமி காலெண்டர் – விண்டேஜ் PIC!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழின் பிரபல நடிகையான கௌதமியின் இளம் வயது புகைப்படம் அச்சிடப்பட்ட காலெண்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

“அது ஒன்னு தவிர இந்த வாரம் okay”.. கால்ல சக்கரத்த கட்டி பறக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

பழம்பெரும் நடிகை கௌதமி..

நடிகை கௌதமி 1965 ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பிறந்தார்.இவர் 1987-ல் வெளிவந்த தெலுங்கு மொழி திரைப்படமான “காந்தி நகர் ரெண்டாவது வீதி” மூலம் கதாநாயகியாக அறிமுகமானாலும் இவர் தமிழில் அறிமுகமான முதல் திரைப்படம் நடிகர்கள் ரஜினி காந்தும் பிரபுவும் இணைந்து நடித்த “குரு சிஷ்யன்” ஆகும்.

இந்திய நடிகை..

நடிகை கௌதமி தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் கன்னடம்,ஹிந்தி,மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்திய மொழிகளிலும் நடித்துள்ளார்.இதனால் இவர் இந்திய நடிகை என்னும் பெருமையை அடைந்தார்.

தொலைக்காட்சியில் கௌதமி..

நடிகை கௌதமி திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தமிழின் முன்னணி தொலைக்காட்சியில் வெளியான பல தொடர்களிலும் நடித்துள்ளார்.தமிழ் மட்டுமல்லாது மலையாள மொழியின் பிரபல தொலைக்காட்சியில் வெளியான தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஆடை வடிவமைப்பாளர்..

நடிகை கௌதமி பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருந்தாலும் நடிகர் கமல்ஹாசன் பத்து வேடங்களில் கலக்கிய 2008 ஆம் ஆண்டு வெளியான தசாவதாரம் திரைப்படம் மூலம் ஆடை வடிவமைப்பாளராக அவதாரம் எடுத்தார்.அது மட்டுமல்லாது அவ்வாணடின் சிறந்த வடிவமைப்பாளருக்கான பிரபல தொலைக்காட்சி விருது ஒன்றையும் பெற்றார்.

அரசியலில் கௌதமி..

நடிகை கௌதமி பல திரைப்படங்களில் நடித்திருந்த சமயத்தில் 1997 ஆம் ஆணடு எல்.கே.அத்வானி தலைமையில் பாரதியா ஜனதா கட்சியோடு தன்னை இணைத்துக் கொண்டார்.அது மட்டுமல்லாது பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான பாரதிய ஜனதா யுவா மோர்ச்-ன் துணை தலைவராகவும் திகழ்ந்தார்.மேலும் அச்சமயத்தில் ஆந்திரா,தமிழ்நாடு,கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதாவிற்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.நடுவில் அரசியலில் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் 2017 ஆம் ஆண்டு தீவிர அரசியலில் மீண்டும் ஈடுபட்டார்.கடந்த 2021 ஆம் ஆண்டு ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தீவிர பிரச்சாரத்தையும் மேற்கொண்டதை நாம் பார்த்திருப்போம்.

கௌதமி காலண்டர்..

இந்நிலையில் 1993 ஆம் ஆண்டு  நடிகை கௌதமியின் புகைப்படம் அச்சிடப்பட்டு வெளிவந்த கேரளாவை சேர்ந்த காலண்டர் ஒன்றை கௌதமி தனது இண்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதில், அவர் “காலம் இடைநில்லாமல் சென்று கொண்டிருக்கிறது, ஆதலால் நாம் நாட்குறிப்பின் ஒவ்வொறு இழைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.இது உங்களுக்கு ஒரு சாகசமாக இருக்கும் என நான் உறுதியளிக்கிறேன்” என்ற சொற்களோடு அப்புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.இப்புகைப்படத்தை நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பகிர்ந்துள்ளனர்.மேலும் இணையத்தில் தீவிரமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாலத்தீவில் RRR நடிகை ஆலியா பட்.. நெருக்கமாக கூட இருக்கிறது யாருனு தெரியுமா?

Is this Gauthami..?Trending vintage calendar going viral

People looking for online information on கௌதமி, கௌதமி காலெண்டர், Gauthami, Vintage calendar will find this news story useful.