VIDEO: "நம்ம குக் வித் கோமாளி அஷ்வினா இது?".. காலேஜ் படிக்கும்போது தெறிக்கவிடும் நடனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மக்களிடையே மிகவும் பிரபலமாகின. இந்நிகழ்ச்சியில் தோன்றிய பலரும் மக்களிடையே இன்னும் நேரடியாக நெருக்கமாகினர்.

is this CWC ashwin in college days viral dance video

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசன் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் இன்னும் மக்களின் அபிமானங்களை பெற்றனர்.

is this CWC ashwin in college days viral dance video

இந்த இரண்டாவது சீசனில் அஷ்வின், புகழ், சிவாங்கி, கனி, ஷகிலா, பாபா பாஸ்கர், மணிமேகலை, பவித்ரா, சுனிதா, பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் கார்டனை கனி வென்றார். இதன்பிறகு அஷ்வின் மிகவும் பிரபலம் ஆகினார். இதனிடையே குறும்படங்களில் நடித்து வந்த அஷ்வின் குமார், குட்டி பட்டாஸ் என்கிற ஆல்பத்தில் நடிக்க, அந்த ஆல்பம் ஹிட்டடித்தது.

இதனைதொடர்ந்து அஷ்வின்  ‘லோனர்’ என்கிற மியூசிக்கல் ஆல்பத்தில் நடித்திருக்கிறார். மேலும் அவர் அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் அந்த படத்தில் அவருடன் இணைந்து புகழ் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் அஷ்வின், தான் படித்த கல்லூரி விழா ஒன்றில் நண்பர்களுடன் இணைந்து டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் இது உண்மையில் அஷ்வின் தானா? என்று கேள்வி எழுப்ப சிலர், “இது அஷ்வின் தான், என் உடன் படித்தவர்.. கோவை பி.எஸ்.ஜி டான்ஸ் ஆடிய வீடியோ தான் இது” என குறிப்பிட்டுள்ளனர்.  இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

VIDEO: "நம்ம குக் வித் கோமாளி அஷ்வினா இது?".. காலேஜ் படிக்கும்போது தெறிக்கவிடும் நடனம்! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Is this CWC ashwin in college days viral dance video

People looking for online information on Ashwin Kumar, Ashwineyy, CookWithComali2, CWC, Trending, Vijay Television will find this news story useful.