விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஒரு முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார் பிரபல கோரியோகிராபர் அமீர்.

அமீருக்கு 16 வயதாகும்போது அவருடைய அம்மா கொலை செய்யப்பட்டதாகவும், அவருடைய 1 வயதில் அவர் தன்னுடைய தந்தையை இழந்து விட்டதாகவும் பல தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஊட்டியில் டான்ஸ் அகாடமி வைத்திருக்கும் அமீர், பல முன்னணி டான்ஸ் நிகழ்வுகளில் கலந்து கொண்டு விருதுகளை பெற்றதாகவும், விஜய் டிவி நிகழ்ச்சிகளில் இவர் கோரியோகிராஃப் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலமாகவே இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்றதாகவும் தெரிகிறது.
தவிர ஆறடி ஆண்டவா, ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் இவர் கோரியோகிராஃப் செய்து இருக்கிறார். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து, இவருடைய நண்பர் ஒருவர் சில பதிவுகளை பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவுகளில் அவர் பதிவிட்டிருக்கும் தகவல்கள் அதிர்வுகளைக் கிளப்பி இருக்கின்றன.
அதன்படி தன்னுடைய 16 வயதில் அமீர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், கல்லறைக்கும் தான் ஓடிக் கொண்டிருந்தார், காரணம் அவருடைய தாயார் கொலை செய்து செய்யப்பட்டார் என்பதுதான் என்றும், அமீர் ஒரு ரூமிலேயே அடைந்து கிடந்ததாகவும், அவருடைய எதிர்காலம் என்னவென்று தெரியாமல் உட்கார்ந்து இருந்தார், வளரும் பொழுது ஒரு ஆதரவற்ற நிலையில்தான் வளர்ந்தார், ஒரு சிறு குடிசையில் ஒரே ஒரு கட்டில் மட்டுமே அந்த வீட்டில் இருந்தது ஒரு பாத்ரூம் கூட இல்லாத ஒரு சூழலில் தான் அவர் வீட்டில் வளர்ந்தார் என்றும் அந்த நண்பர் குறிப்பிடுகிறார்.
மேலும் அமீருடைய சிறுவயது ஆசை, எப்படியாவது இந்திய ராணுவத்தில் சேர்ந்து விட வேண்டும் என்பதுதான், இதற்காக அவர் பாதுகாப்பு துறைக்கு படித்ததாகவும் அந்த நண்பர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அமீருடைய கையில் இந்திய கொடியை பச்சை குத்தி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த செய்திகள் எந்த அளவுக்கு உண்மை என்பதை விசாரிப்பதற்காக அவருடைய நண்பரை நாம் பிரத்தியேகமாக தொடர்பு கொண்டபோது இதை எல்லாம் உண்மை என்று அவர் தெரிவித்திருக்கிறார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் ஃபினாலே ரேஸ் என்கிற வெற்றியை அடைய கூடிய இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
இதனால் 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, அடுத்தடுத்த நாட்களில் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.